அதிகம் எதிர்பார்த்த மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹைபிரிட், இன்டலிஜென்ட் எலக்ட்ரிக் ஹைபிரிட் என இரு மாடல்களில் கிடைக்கும்.
ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 5 சீட்டர், பனோரமிக் சன்ரூப், நல்ல மைலேஜ், லெதர் சீட்ஸ், 360 டிகிரி கேமரா, ஸ்மார்ட் பிளே புரோ பிளஸ் உடன் 9.0 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, ஆறு ஏர் பேக்குகள், டூயல் டோன், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லித்தியம் அயான் பேட்டரி பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசன்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிறப்பம்சம்.
இதன் 1.5 லிட்டர் கே 15 சி பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின், 103.6 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 1.5 லிட்டர் 3 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் ஸ்டிராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின், 92.45 பிஎச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்/இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.11-27.97 கி.மீ., மைலேஜ் கொடுக்கும். ரூ. 11 ஆயிரம் செலுத்தி 'புக்கிங்' செய்யலாம். இதுவரை 57 ஆயிரம் பேர் 'புக்கிங்' செய்துள்ளனர்.
விலை: ரூ. 10.45- 19.65 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)