மனதை கவரும் டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி.,யில் புதிதாக கேமோ எடிஷன் அறிமுகமாகியுள்ளது. 2021ல் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கேமோ எடிஷனை களமிறக்கியுள்ளனர்.
போலியேஜ் கிரீன் வண்ணம், பியானோ பிளாக் அல்லது பிரிஸ்டைன் ஒயிட் ரூப் வண்ணம், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், முன் பக்கத்தில் கேமோ பேட்ஜ், 16 இன்ச் சார்க்கோல் அலாய் வீல்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், உட்புறத்தில் மிலிட்டரி கிரீன் வண்ண டேஷ்போர்டு, பிரிமியம் பேப்ரிக் சீட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ரூப் ரெயில், ஆட்டோ ஏசி, ரெயின் சென்சிங் வைப்பர், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட கிளஸ்டர் வசதிகள் நீக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் விலை, புரொஜக்டர் ஹெட்லேம்ப், குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழுமையான 5 ஸ்டார் ரேட்டிங், ஐந்து சீட்டர், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் ஹர்மன் இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், டாடா ஐஆர்ஏ கனெக்டட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், குரூஸ் கன்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், 6 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் சிறப்பம்சம்.
இதன் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல்/ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ. 6.85-8.63 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)