பார்த்தாலே பிடிக்கும் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்சி ரக ஸ்கூட்டரில் புதிதாக மோட்டோஜிபி எடிஷன் அறிமுகமாகியுள்ளது. கருப்பு வண்ணத்தில் ஜொலிக்கிறது. ஸ்போர்ட்டியான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வேறு முக்கிய மாற்றம் செய்யப்படவில்லை.
கலக்கல் வடிவமைப்பு, இரட்டை எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லேம்ப், புளூடூத் இணைப்பு, யமஹாவின் 'ஒய்' இணைப்பு, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஹசார்ட் லேம்ப், இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், முன்பக்கத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்பக்கத்தில் டுவின் ரிமோட் ரிசர்வாயர் ஷாக் அப்சார்பர்ஸ், 14 இன்ச் அலாய் வீல், டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் இன்ஜின் கட்-ஆப் தொழில்நுட்பம், யுஎஸ்பி சார்ஜர், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, டியூப்லெஸ் டயர்கள் சிறப்பம்சம்.
இதன் 155 சிசி லிக்கியுடு கூல்டு இன்ஜின், 15 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
விலை: ரூ.1.42 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)