* முனை மழுங்கிய கத்தரிக்கோலால் உப்புக் காகிதத்தை சிலமுறை கத்தரித்தால், மீண்டும் கூர்மையாகி விடும்
* பெரிய, 'பார்க்கிங் லாட்'டில், காரை அடையாளம் கண்டுகொள்ள, அதன் பின்புறக் கண்ணாடியருகே பளிச்சென்று தெரியுமாறு, உங்கள் குழந்தையின் ரப்பர் பொம்மை அல்லது ஏதாவது கண்ணைக் கவரும் வித்தியாசப் பொருளை வைத்து விடுங்கள். சுலபத்தில் உங்கள் கண்களில் தட்டுப்பட்டு விடும்
* துணி அல்லது கார்ப்பெட்டில் பப்பிள்கம் ஒட்டிக்கொண்டால், ஐஸ் கட்டியால் நன்றாக தேய்க்கவும், சுலபமாக சுரண்டி எடுத்து விடலாம்.