வணக்கம்; நான் செங்கமல நாச்சியார். விருதுநகர், வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை. 'சமச்சீர் கல்வி பாடத் தயாரிப்பு குழுவின் 45 ஆசிரியர்களில் நானும் ஒருவர்'ங்கிறது, என் 27 ஆண்டு கால அனுபவத்திற்கான அங்கீகாரம்!
களம் அறிதல்
1br@@'ஒவ்வொரு ஊரும் பள்ளியும் ஒவ்வொரு விதத்துல தனித்துவமானது'ங்கிறதால, பணியிட மாறுதலாகி புதிய பள்ளிக்குப் போனதும், அந்த ஊரோட டீக்கடையில் கணக்கு ஆரம்பிக்கிறதுதான் என் முதல் வேலை! ஊரையும், மக்களையும் அந்த இடத்துல இருந்து தெரிஞ்சுக்கிட்டு செயல்பட ஆரம்பிப்பேன்.
அணுகுமுறை
நான் இங்கே வந்தப்போ பள்ளி வளாகத்துல மது பாட்டில்கள், அடுப்பு மூட்டி கறி சமைச்ச கழிவுகள்னு மிரட்டலா இருந்தது; வகுப்பறை இரும்பு கதவு களவு போயிருந்தது. எதுக்கும் நான் பின்வாங்கலை. 'உங்க குழந்தைகளை இந்த பள்ளியில சேருங்க; நல்ல மனிதர்களா உருவாக்குறேன்'னு போதை ஆசாமிகள்கிட்டே சொன்னேன். முதல்ல முறைச்சாங்க... அப்புறம், திருந்திட்டாங்க!
ஜாதி நோய்
பத்து வயது தாண்டாத மாணவர்கள்கிட்டே 'ஜாதி நோய்' இருந்தது! இந்த நோயின் வேரறுக்கணும்னு முடிவு பண்ணினேன். மாணவர்களோட வீட்டு விசேஷங்களுக்கு பரிசோட போனேன். துக்க காரியத்துல பாதம் தொட்டு அஞ்சலி செலுத்தினேன். எல்லார் வீடுகள்லேயும் சாப்பிட்டேன். மாணவர்கள்கிட்டே இப்போ அந்த நோய் இல்லை!
கம்பீர மாணவர்கள்
என்கிட்டே படிச்ச மாணவர்கள் யாருக்கும் அடிமையா இருக்குறதில்லை. குற்ற செயல்கள்ல ஈடுபடுறது இல்லை. 200க்கும் மேலான என் மாணவர்கள் ராணுவம், காவல் துறையில வேலை பார்க்குறாங்க! இவங்க எல்லாரும் என் ஆசிரியர் பணிக்கான பதக்கங்கள்!
ஆசிரியர்களின் ஆசிரியர்
ஆசிரியர் போராட்டத்துல நான் கலந்துக்க மாட்டேன். கூலியாட்களோட குழந்தைங்க படிக்கிற பள்ளி இது; நான் போராட போயிட்டா பிள்ளைங்க ஏரி, கண்மாய்னு போயிடுவாங்க; அங்கே ஏதாவது அசம்பாவிதம்னா யார் பொறுப்பு; 'என் புள்ளையா பார்த்துப்பேன்'னு பள்ளியில சேர்த்துட்டு நான் அலட்சியமா இருக்க முடியுமா!
என் கனவு
எனக்கு 18 வயசுல திருமணம். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். ஆசிரியரா நேர காலம் பார்க்காம வேலை பார்த்தேன். இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கு. இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கு. 'உங்க மாணவர்கள் தனித்துவமா இருக்குறாங்கன்னு எல்லாரும் பாராட்டுறதை தக்க வைச்சுக்கணும்'ங்கிறது பெரும் கனவு!
அனுபவ பாடம்
காத்திருப்பு, கருணை, தெளிவு... எல்லாரோட இதயத்தையும் தொடும்; அந்த வினாடியில நீங்க என்ன சொன்னாலும் அந்த இதயம் காது கொடுக்கும்; இந்த முயற்சியினால நமக்கும் நல்வழி தெரியும்; இது என் அனுபவம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
SSLC தேர்வு நடப்பதற்கு 2 மாதம் முன்பு CHICKEN POX தாக்கியபோது, வகுருப்பில் நடத்தும் சிறப்பு பாடங்களை தெருக்கோடியில் நின்று என் தமக்கையிடம் கொடுத்த ஆசிரியரா மேல் இல்லை - என் குடும்பம் நாள் வேலை பார்க்க வேண்டும் என்று மிக விரும்பியும் -SSLC யில் கிடைத்த அண்ணா பரிசின் தொகையை வீட்டில் கொடுக்காமல் நேரடியாக கல்ல்லூரிக்கு மேற்படிப்புக்கு செலுத்திய ஆசிரியரா.... மற்றுமொரு தெய்வத்தின் செய்தியை அறிகிறேன் . என் கோடானு கோடி வணக்கங்கள்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.