பட்ஜெட் விலையில் பக்காவான டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் என நான்கு வேரியன்ட்கள் உள்ளன.
இரண்டு பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கும். மிட் ரேஞ்ச் 19.2 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி, முழுமையான சார்ஜில் 250 கி.மீ., செல்லும். உயர் ரக 24 கிலோவாட் பேட்டரி, முழு சார்ஜில் 315 கி.மீ., செல்லும். 0-60 கி.மீ., வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டும். 50 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம், 57 நிமிடங்களில் 10-80 சதவீதம் சார்ஜ் ஏற்றலாம். 3.3 கிலோவாட் வீட்டு சார்ஜரில், 5-6 மணி நேரம் தேவைப்படும். 7.2 கிலோவாட் 'ஏசி' சார்ஜரில் 2.35-3.35 நிமிடம் போதும்.
புரொஜக்டர் ஹெட்லேம்ப்ஸ், 14 இன்ச் ஹைபர் ஸ்டைல் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டூயல் ஏர்பேக்குகள், 5 சீட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி, ரீஜென் பிரேக்கிங் சிஸ்டம், இசட் -கனெக்ட் செயலி, குரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பேட்டரிக்கு 8 ஆண்டு அல்லது 1.60 லட்சம் கி.மீ., வாரன்டி சிறப்பம்சம்.இந்தியாவின் விலை குறைவான இந்த எலக்ட்ரிக் காரில், ஒரு கி.மீ., பயணம் செய்ய ரூ. 1 தான் செலவாகும். ரூ. 21 ஆயிரம் செலுத்தி 'புக்கிங்' செய்யலாம். முதலில் 'புக்கிங்' செய்யும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே தற்போதைய அறிமுக விலை பொருந்தும்.
விலை: ரூ. 8.49- 11.79 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)