கடந்த சில வாரங்களாக, சிங்கப்பூரில் உள்ள என் மகளின் வீட்டில் இருக்கிறேன். ஓய்வு பெற்ற பின் அடிக்கடி இங்கு வருவதுண்டு. இங்கு இருக்கும் நாட்களில், பெரும்பாலான நேரத்தை நான் செலவிடுவது, சிங்கப்பூர் தேசிய நுாலகத்தில் தான்.
உலகம் முழுதும் இருந்து வெளிவரும் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை களை, பல சர்வதேச இதழ்களில் தேடித் தேடி படிப்பதுண்டு. அப்படி ஒன்று தான், அமெரிக்காவில் உள்ள, 'மேயோ கிளினிக்' வெளியிட்ட, நோய் தொற்றை தடுப்பதில், காபியின் பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரை.
காபி தரும் நன்மைகள்
இதயம் தொடர்பான கோளாறுகள், நரம்பியல் பிரச்னைகள், உடல் உள்செயல்பாடுகளில் ஏற்படும் பல முரண்கள், மனநிலையில் வரும் மாறுபாடுகள், துாக்கப் பிரச்னைகள்,கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பது, அழற்சி கோளாறுகள், பித்தப் பை கற்கள் உருவாவது, கல்லீரலில் ஏற்படும் தழும்புகள், 'டைப் - 2' சர்க்கரை கோளாறு, உடல் பருமன் என்று பல பிரச்னைகளை தடுக்கும் ஆற்றல் காபிக்கு உண்டு என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
அரபு நாடுகளில் இருந்து, 1751ல் காபி நம் நாட்டிற்கு அறிமுகம் ஆனது. இத்தனை நுாற்றாண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் காபி, உடம்பிற்கு கெடுதல் என்பது தான் பொதுவான அபிப்ராயம்.
'கேபைன்'
காபியில் உள்ள பிரதான மூலப்பொருள், 'கேபைன்!' இது டீ, சாக்லேட் பானங்களிலும் உள்ளது. இன்றைக்கு காபியில் 100க்கும் அதிகமான வகைகள் உள்ளன. பயிர் செய்வதில் இருந்து, உபயோகிக்கும் வரை உள்ள நடைமுறைக்கு ஏற்ப கேபைன் அதில் இருக்கும்.
ஐந்து கிராம் காபி பொடியில், 50 மி.கி., அளவுக்கு கேபைன் சராசரியாக இருக்கும். தினமும் 200 - 250 மி.கிராம் வரை கேபைன் உடலுக்குள் செல்லலாம்.
ஒரு முறை நாம் குடிக்கும் ஒரு கப் காபியில், 5 மி.கிராமிற்கு மேல் கேபைன் இருக்கக் கூடாது. தினமும் 400 மி.கிராமிற்கு மேல் கேபைன் நம் உடலுக்குள் சென்றால், உடல் நடுக்கம், சீரற்ற இதயத் துடிப்பு,தற்கொலை எண்ணம், கருச்சிதைவு, நெஞ்செரிச்சல் என்ற பலபிரச்னைகளை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு, அதாவது தினமும் 250 மி.கி., என்ற அளவில் கேபைன் உடலுக்குள் சென்றால், கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரிக்கும்.
ரத்த நாளங்களின் உட்சுவரில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். சீரற்ற இதயத் துடிப்பைத் தடுக்கும். சிறிய ரத்த நாளங்களின்செயல்பாட்டை அதிகரிக்கும்.
இதயத் தசைகள் சுருங்கி விரியும் தன்மை வலுவாகும். அதிக ரத்தம் இதயத்திற்கு செல்லும். இதய செயலிழப்பைத் தடுக்கும்.
தொடர்ந்து காபி குடிப்பதால், நீண்ட நாட்கள் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வருவதையும், இதய செயலிழப்பையும் மறைமுகமாக தடுக்கும்.
இது தவிர, மற்ற உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளில், கேபைன் செய்யும் நன்மைகளும் உண்டு. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் நோய் அறிகுறிகளை தடுக்கும். தைராய்டு சுரப்பியை நன்கு வேலை செய்ய வைக்கும்.
உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சி, கல்லீரல் நோய்கள், பித்தப் பை கற்கள் உருவாவது, நரம்பு கோளாறுகள், மறதி நோய் உட்பட, பல கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வெள்ளை சர்க்கரை சேர்க்காமல், தரமான காபியை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் குடிக்கலாம் என்கிறது ஆய்வு.
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் வரும் பக்க விளைவுகளை தடுக்க, நிறைய தண்ணீர் குடிக்கலாம்; நீண்ட துாரம் நடக்கலாம்; சுவாசப் பயிற்சி செய்யலாம்.
இதனால் எல்லாம் சற்று நேரத்தில் நிலைமை சரியாகாவிட்டால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். டாக்டர் என். தினகரன் குடல், ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர், முன்னாள் பேராசிரியர், அரசு பொது மருத்துவமனை, சென்னை. போன்: 98411 51599
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நாம் ஆயிரக்கணக்கான வருடங்களாக என்ன குடித்தோம்?? சற்று நூறு ஆண்டுகளாகத்தான் டீ, காபி எல்லாம், இதற்கு முன்னர், பழைய கஞ்சியின், தண்ணீர் தான் குடித்து வந்தோம், குடலுக்கு நல்லது.. பழைய கஞ்சியின் தண்ணீரை குடித்து விட்டு, காலையில் ஆறுமணிக்கெல்லாம், தோட்டம் சென்று, பயிர்கள் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்த்து விட்டு, வேலை ஆட்கள் வரும் வரை தோட்டத்தில் இருந்து, பின்னர் வீட்டில் அல்லது தோட்டத்தில் காலை, மத்திய உணவு அருந்துவோம். அந்த மாடல் இப்பொழுது நாகரீகம் என்கின்ற பெயரில் முற்றிலும், அழிந்து விட்டது...இடைவேளைகளில், ஊறவைத்த, நில கடலை, பச்சை பட்டாணி, கருப்பு சுண்டல், பாதம் பருப்பு, அக்ரூட் , ஆகியவற்றை, நாள் ஒரு முறை, டீ காபிக்கு பதிலாக எடுத்து கொள்ளலாம்....காய்கறி சூப் எடுத்து கொள்ளலாம்.. சீனர்கள் / ஜப்பானியர்கள், , வெள்ளை சர்க்கரை, மற்றும், நாடு சர்க்கரை கூட எடுத்து கொள்வதில்லை...பொதுவாக, இந்தியாவில் சாப்பிடப்படும், அளவுக்கு இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதில்லை. சமநிலை படுத்த பட்ட காய்கறிகளை எடுத்து கொண்டு, வாரம் மூன்று முறை, ஒரு நாள் விட்டு ஒரு நாள், சுத்தமான, கொத்தமல்லி, ஜூஸ் போட்டு, உடன் சற்று இளநீர் அல்லது தேங்காய் பால் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவு பொருட்கள் வெளியேறி விடும்...டீ காபி, உடலில் கழிவு பொருள்களை சேர்த்து வைக்கும்...இன்றைக்கு உள்ள முக்கால் வாசி நோய்களுக்கு காரணம், கட்டுபாடற்ற டி, காப்பிதான்....அது போக, பேக்கரியில் உள்ள நாள் பட்ட உணவுகள்...இவை எல்லாம் உடலுக்கு எதிரிகள்....
காலையில் எழுந்தவுடன் இன்று நம்மவர்கள் எந்த பிரச்சனையையும் கொண்டுவந்து விடக்கூடாதே என அஞ்சி நடுங்குபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த கவலையில் காபி குடிப்பதையே மறந்து விடுகிறார்கள்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.