லேப்டாப் கவனம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
00:00

இன்னும் சில மாதங்களில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் கரங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர் தவழப் போகிறது. பள்ளிகளில் இறுதி நிலையில் பயிலும் இவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாய் இவை ஒரு புதிய வாழ்க்கைத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்றால், அது மிகையாகாது.
பொதுவாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படக் கூடிய வாழ்நாள், பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்றுக் குறைவு என்றாலும், நாம் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால், அதன் வாழ்நாளை நீட்டித்து, அதிக பட்ச பயன்களை அடையலாம். கீழே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், லேப்டாப் கம்ப்யூட்டரை வேகமாக இயங்கச் செய்திடலாம்.
1. டிபிராக்: வாரம் ஒருமுறையேனும், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை டிபிராக் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் உங்கள் பைல்களை, ஹார்ட் டிஸ்க்கில் பதிகையில், அவற்றைப் பல துண்டுகளாக்கி, ஆங்காங்கே பதித்து வைக்கும். டிபிராக் செய்திடுகையில், இந்த துண்டுகள் அனைத்தையும், கம்ப்யூட்டர் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வைக்கிறது. இதனால், இந்த பைல்களைப் படிக்க லேப்டாப் அதிக சிரமப்படத் தேவை இல்லை. செயல்படும் நேரமும் குறையும்.
2. ரெஜிஸ்ட்ரி கிளீன்: விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படை கோப்பாக அமைவது ரெஜிஸ்ட்ரி. இதில் நாம் பதியும் புரோகிராம்களை இயக்குவதுகுறித்த குறியீடுகள் எழுதப்படும். இந்த புரோகிராம்களை எடுத்த பின்னரும், ரெஜிஸ்ட்ரியில் அந்த குறியீடுகளின் சில பகுதி தங்கிவிடும். இவையும் லேப்டாப் இயக்கத்தை மந்தப்படுத்தும். எனவே ரெஜிஸ்ட்ரியை அவ்வப்போது கிளீன் செய்திடும் புரோகிராம்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
3. ஹார்ட் ட்ரைவின் சுமை: மியூசிக், பொழுதுபோக்கு, படங்கள், வீடியோக்கள் எனப் பலவகையான பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் நாம் குவித்துக் கொண்டே போவோம். அதே போல சிறிய புரோகிராம்களை, ஓரிரு முறை பயன்படுத்தவதற்காகப் பதிந்துவிட்டு நீக்காமலே இருப்போம். இவை எல்லாம் ஹார்ட் டிஸ்க்குக்குச் சுமையை அளிக்கும். டிஸ்க் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும். எனவே தேவையற்ற பைல்களையும், புரோகிராம்களையும் நீக்க வேண்டும்.
4. வைரஸ் பாதுகாப்பு: எந்த நேரமும், எவ்வழியிலும் வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் லேப்டாப்பிற்குள் நுழையலாம். எனவே வைரஸ்களிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைக் கட்டாயம் நிறுவ வேண்டும். அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். அடிக்கடி முழுமையாக இயக்கிக் கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டும். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாக இயங்கி, லேப்டாப்பினைச் சோதனை செய்திடும் வகையிலும் செட் செய்திடலாம்.
5. ரீசைக்கிள் பின்: நாம் நீக்கும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னில் தங்குகின்றன. நம்மை அறியாமல் அழித்துவிட்டால், பின்னர் மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள விண்டோஸ் இந்த ஏற்பாட்டினைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு பைல் அழிக்கப்பட்ட பின்னரும் தேவையா என்பதை நாம் உடனே அறிந்து கொள்ள முடியும். எனவே ரீசைக்கிள் பின்னில் உள்ள நீக்கப்பட்ட பைல்களை, அதிலிருந்தும் நீக்க வேண்டும்.
6. தற்காலிக இணைய பைல்கள்: இன்டர்நெட்டில் நாம் தளங்களைப் பார்க்கும்போது, அவை சார்ந்த பல பைல்கள், தற்காலிக பைல்களாக நம் லேப்டாப்பில் சேவ் செய்யப்படும். இவை அனைத்தையும் உடனுடக்குடன் நீக்க வேண்டும்.
7.தேவையற்ற ஸ்டார்ட் அப் புரோகிராம்கள்: கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போதே, சில புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். நாளடைவில் நமக்குத் தேவைப்படாத, அல்லது சில நாட்கள் மட்டும் தேவைப்பட்ட புரோகிராம்களும் இயங்கியவாறே இருக்கும். இவற்றை நீக்குவது, கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வழி வகுக்கும்.
8. கூல் கூல்: உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை, உங்கள் படுக்கை, சோபா, குஷன் ஆகியவற்றின் மீது வைத்து இயக்க வேண்டாம். லேப்டாப்பில் உருவாகும் வெப்பம் சுதந்திரமாக வெளியேற வேண்டும். இப்போது இதற்கெனவே சிறிய ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி, அதன் மீது வைத்துப் பயன்படுத்துவது, வெப்பத்தை வெளிச் செலுத்த உதவும். இதனால், லேப்டாப்பின் பாகங்கள் விரைவில் கெட்டுப் போவது தடுக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரகாஷ் - அந்தியூர்,இந்தியா
22-ஜூலை-201115:57:16 IST Report Abuse
பிரகாஷ் ஒரு டிஸ்க் ல இருந்து பைல்ஸ் டெலிட் செய்யும் பொது அந்த இடம் காலியாக இருக்கும். அடுத்த பைல் வேறு இடத்தில் பதியப்படும். இந்த காலி இடத்தை சரி செய்து நமக்கு உதவ இது பயன்படுகிறது. pls use the following step to get defrag your drives. 1. Open My Computer. 2. Right-click the local disk volume that you want to defragment, and then click Properties. 3. On the Tools tab, click Defragment Now. 4. Click Defragment.
Rate this:
Share this comment
Cancel
வசந்த குமார்.s - madurai,இந்தியா
18-ஜூலை-201120:40:39 IST Report Abuse
வசந்த குமார்.s டிபிராக்: என்றால் என்ன? விரிவாக்கம் தரவும் .அதை எப்படி செய்வது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X