மாப்பிள்ளையின் மதிப்பு, ஊர்வலம் மற்றும் திருமண வரவேற்பின் போது எதிரொலிக்கும். அதற்கு ஏற்றபடி இன்று, பல புது மாப்பிள்ளைகள் தங்களை விதவிதமாக அலங்கரித்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக, சினிமா நட்சத்திரங்களின் தீவிர ரசிகர்கள், மாப்பிள்ளையாக பவனி வரும்போது, தன் அபிமான நடிகர், அவரது திருமணத்தின் போது, எப்படி அலங்கரித்துக் கொண்டாரோ, அப்படியே தாங்களும் அணிய விரும்புகின்றனர்.
அதிலும், ஹிந்தி பட உலக இளம் நட்சத்திரங்கள் அணிவதையே அவர்களின் ரசிகர்கள் அணிய துடிக்கின்றனர். குறிப்பாக, ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஆனந்த அகுஜா மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் மாப்பிள்ளைகளாக அணிந்தவற்றை, ரசிகர்கள் வாங்கி அணிவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருமணத்தின்போது...
* ரன்வீர் சிங், ஏகப்பட்ட முத்து மாலைகளை கழுத்தில் அணிந்திருந்தார்
* ரன்பீர் கபூர், தங்கத்தில் கோர்க்கப்பட்ட முத்து மாலைகள் அணிந்திருந்தார்
* ஆனந்த அகுஜா, முத்து மற்றும் மாணிக்க சிவப்பு கல் கோர்த்த மாலைகளுடனும்
* விக்கி கவுசல், பச்சைக்கல் ஆரம்; ஒளி பொருந்திய லோரியா தங்க குண்டுகள் கோர்த்த ஆரங்களும் அணிந்திருந்தார்
இந்த நடிகர்கள் எந்த கடையில் நகை வாங்கினரோ, அங்கேயே வாங்கி அணிந்து மாப்பிள்ளையாக பவனி வருவது தான், இப்போதைய, 'லேட்டஸ்ட் பேஷன்!'
ரசிகர்களின் ஆசையால், 'டிமாண்ட்' கூடி விட்டதாக கூறுகின்றனர், நகைக் கடை முதலாளிகள்!
ஜோல்னாபையன்