'அவர் என்னை அடிக்கிறாரும்மா' - மகள் அம்மு; 'நீயென்ன பண்ணினே?' - தாய் கல்பனா.
'நான் தப்பு பண்ணிருப்பேன்னு நீ எப்படிம்மா முடிவு பண்ணினே?'
'மாப்பிள்ளை நல்லவரா தெரியுறாரு; நீ எதுவும் பண்ணாம எப்படி?'
'அப்படின்னா... நான் தப்பே பண்ணினாலும் அவர் அடிச்சா பரவாயில்லையா?'
'இப்ப நான் என்ன சொல்லணும்?'
'இந்தமாதிரி நேரத்துல ஒரு அம்மா தன் பொண்ணுக்கு என்ன சொல்லணும்னு எனக்கு எப்படித் தெரியும்?'
'உன் புருஷனோட மொத்த காதலும் உனக்கு வேணும்னு ஆசைப்பட்டா அவன் தர்ற மொத்த வலியையும் நீ ஏத்துக்கணும்!'- இது உங்கப்பா என்னை அடிச்சப்போ எங்கம்மா எனக்கு சொன்னது. அதைக்கேட்டு இன்னைக்கு நான் நல்லாயிருந்தாலும், எங்கம்மா அப்படி சொல்லியிருக்கக் கூடாது!'
'பாட்டி வேறென்ன சொல்லியிருக்கணும்?'
'புருஷன் பொண்டாட்டியை அடிச்சா அவன் கூட சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் அந்த பொண்ணுக்கு கிடையாது'ன்னு சொல்லியிருக்கணும்!'
'இப்ப நான் என்னம்மா செய்றது?'
'உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்; இல்லேன்னா... நாளைக்கு இதே குழப்பத்துல உன் பொண்ணு நிற்கிற சூழல் வரும்; இது தொடர்ந்துட்டே இருக்கும்!'
சபாஷ்! அம்முவுக்கு தெளிவு கிடைச்சிருச்சு; உங்க பொண்ணுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
படம்: அம்மு (மலையாளம்)