* ஓர் மனித உயிர் போக காரணமானவர்கள் குற்றவாளிகள்; அவர்கள் செய்தது குற்றம்; இல்லை... இல்லை... இதை மக்கள் செய்தால்தான் குற்றம்; இதையே அரசு மருத்துவர் செய்தால் அது கவனக்குறைவு; ஓர் உயிர் போக வேண்டும் என்று மருத்துவர் நினைப்பாரா என்ன; சரிதான்... ஆமாம்... 'டாஸ்மாக்' பற்றி அரசு மருத்துவர்கள் கருத்தென்ன?
* 'கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் உள்ளனர்; முஸ்லிம்களுக்கு ஒரு நீதி; ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஒரு நீதியா'ன்னு கொந்தளிக்கிற தமிழக காங்கிரஸ் தலைவரே... நீங்க சொன்னமாதிரி அந்த முஸ்லிம் இளைஞர்களை விட்டுட்டா, 'இவங்க விடுதலை நியாயம்'னு சொல்லிடுவீங்களா?
* 'மத்திய அரசு தொழிலதிபர்களோடு கைகோர்த்தால், 'கார்ப்பரேட்டுகளுக்கு சாமரம் வீசும் அரசு'ன்னு கூப்பாடு போடணும்; இதுவே, 'அரசு - தொழிலதிபர் - தொழிலாளர் கைகோர்த்தால் தமிழகம் வளர்ச்சி பெறும்; இதுதான் அரசின் குறிக்கோள்'னு நம்ம முதல்வர் பேசினா, 'தொழிலாளர் நலன் காக்கும் அரசு'ன்னு சிலிர்க்கணும்; சரிதானே?
* 'ஒரு சிலரது தவறுக்காக அரசு மருத்துவர்கள் அனைவரையும் குறை சொல்லக்கூடாது' - அமைச்சர். ஏன் சார்... ஒரு பள்ளியோட சுவர் இடிஞ்சு விழுந்தா எல்லா பள்ளிகளோட சுவர்களையும் ஆய்வு பண்றோம்; ஒரு தட்டு உணவு விஷமானா எல்லா உணவகங்களுக்கும் வேட்டைக்குப் போறோம்... இதெல்லாம் பகுத்தறிவுல சேராதுங்களா?
'நாற்றம்'னு நினைச்சீங்களா... ஜலதோஷம்!