சர்க்கரைக்கு மாற்று வெல்லம் கிடையாது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2022
08:00

வெள்ளை சர்க்கரையை 'சல்பர்' எனப்படும் வேதிப் பொருள் கொண்டு சுத்திகரிப்பு செய்வதால், அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது சல்பரை பயன்படுத்தி, சுத்திகரிக்கப்படாத வெள்ளைச் சர்க்கரை கிடைக்கிறது; அதை தேவையான நேரத்தில் உபயோகிக்கலாம்.

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி பயன்படுத்துவதே ஆரோக்கியம் என்ற பிரசாரம், சமீப ஆண்டுகளில் அதிகமாக செய்யப்படுகிறது. நாம் அனைவரும் நினைப்பது போல, சர்க்கரைக்கு மாற்று வெல்லம் என்பதெல்லாம் கிடையாது.

நம்முடைய பாரம்பரிய உணவில், எப்படி அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சர்க்கரையையும், வெல்லத்தையும் பயன்படுத்தினரோ, அது தான் ஆரோக்கியம்.

இப்போது மழை, குளிர் காலம். இந்த காலம் முழுதும், உடல் வெப்பத்திற்காகவும் எளிதாக செரிமானத்திற்கும் உதவும் வகையில், கடலைப் பருப்பு, வெல்லம் சேர்த்து போளி, எள், வெல்லம் சேர்த்து எள் உருண்டை, கருப்பட்டி சேர்த்த லட்டு வகைகள், வெல்லம், தேங்காய் அல்லது பருப்பு பூர்ணம் வைத்து செய்யப்படும் பலவித உணவுகள், கம்பு தோசை செய்து சாப்பிடுவர்.

அதே போன்று, வெயில் காலத்தில், சர்பத், டீ, காபி, பல வகையான கஞ்சி... இவற்றில் சர்க்கரை சேர்த்துக் கொள்வர். இது போல அந்தந்த பருவ நிலைக்கு ஏற்ப, சர்க்கரை அல்லது வெல்லத்தை தேவையான அளவு மட்டும் சாப்பிடுவதே ஆரோக்கியமானது.

-ருஜுதா திவேகர்,
நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202213:01:32 IST Report Abuse
Natarajan Ramanathan சல்பர் இல்லாத வெள்ளை சர்க்கரை நல்லது. வெல்லம் தயாரிக்கும் விதத்தை பார்த்தல் யாருமே அதை கண்டிப்பாக வாங்கவே மாட்டார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202212:55:07 IST Report Abuse
sankaseshan இது போன்ற தவறான தகவல்கள்லாய் புறக்கணிக்க வேண்டும் ஆண்டவன் இயற்கையாகவே உடலை பாதுகாத்து கொள்ள வேண்டிய சக்தியை கொடுத்துள்ளான் , அவசியம் ஏற்பட்டால் மருத்துவரிடம் போகலாம்
Rate this:
Cancel
30-நவ-202211:26:33 IST Report Abuse
ஆரூர் ரங் சர்க்கரையை வெளுக்க வைக்க சல்பர் டை ஆக்சைடு பயன்படுத்துகின்றனர். இதன் மிச்ச RESIDUE சர்க்கரையில் லட்சத்தில் 7 பங்குக்கு குறைவாகவே இருக்கும். ஒருநாளைக்கு பயன்படுத்தும் 15 கிராமில் 1 மில்லிகிராமுக்கும் குறைவு. அதனால் உடலுக்கு ஆபத்து என்பதை நம்ப முடியவில்லை. இப்போது மேம்பாட்ட IONISATION, AMMONIYA முறை மூலம் சல்பர் அறவே இல்லாமல் SULPHUR FREE சர்க்கரையை தயாரிக்கும் தொழில் நுட்பமே வந்து விட்டது. வெல்ல மண்டியில் விற்பனைக்குக்கு குவித்து வைத்திருப்பதை ஒருமுறை😇 போய்ப்பாருங்கள். அந்த அசுகாதாரம் மில்லில் தயாரிக்கும் ஆலைச் சர்க்கரையில் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X