பரண் மீது ஆடு வளர்ப்பிற்கு, டிரைசெல் மேட் அமைப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்., பண்ணை உரிமையாளர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான பண்ணையில், பரண் மீது தலைச்சேரி ரக ஆடுகளை வளர்த்து வருகிறேன். பரண் மீது ஆடு வளர்ப்பு பொருத்தவரையில், மரப்பலகை மற்றும் இரும்பிலான தகரம் போடுவார்கள். இது, பருவ காலங்களில் வரும் நோய்களை எளிதாக பரப்பும்.
குறிப்பாக, பரண் மீது மரப்பலகை போடும் போது, சாணம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது, ஈரம் காத்து பருவ கால நோய்கள் தாக்கும். அதேபோல், இரும்பிலான தகரத்தை போடும் போது, சாணம் மற்றும் சிறு நீர் கழிக்கும் போது, தகரம் துருபிடித்து புதிய விதமான நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
இதை தவிர்க்க, டிரைசெல் மேட் என, அழைக்கப்படும் திடமான பிளாஸ்டிக் அட்டை தரைக்கு போடலாம். இது, ஆடுகளுக்கு சவுகரியமாக இருக்கும். உதாரணமாக, ஆடுகள் சாணம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது, டிரைசெல் மேட் ஓட்டை வழியாக கழிவுகள் வெளியேறும்.
மேலும், தழை தீவனங்கள் போடும் போது, தொற்று பாதிப்பு இன்றி பாதுகாப்பாக இருக்கும். பரண் மீது ஆடு வளர்ப்பிற்கு, டிரைசெல் மேட் சிறந்தது என, கூறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.ரமேஷ்
86102 45808