தாய்லாந்த் ரக பலா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச்சேர்ந்த விவசாயப்பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், தாய்லாந்த் பகுதியில் விளையும், பலா பழத்தை சாகுபடி செய்யலாம். மாடி தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களில், தாய்லாந்த் ரக பலா பழம் சாகுபடி செய்யலாம்.
பிற ரக பலா பழங்களை போல இல்லாமல், அனைத்து சீசன்களில், தாய்லாந்த் பழ மகசூல் கொடுக்கும். குறிப்பாக, தாய்லாந்த் பலா சுளை மஞ்சள் நிறத்தில் இருக்கும். முழு பழம், 10 கிலோ எடை வரையில் இருக்கும். இது, பிற ரக பலாப்பழங்களை காட்டிலும், அதிக சுவையுடன் இருக்கும்.
சீசன் இல்லாத காலங்களில், தாய்லாந்த் ரக பலா பழம் விளைவதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்
98419 86400