'சொட்டு சொட்டாக நீர் கட்டு கட்டாக காசு' என்பது எல்லாப்பயிருக்கும் பொருந்தும் பொன்மொழி.
எந்த ஒரு பயிரும் தனது தேவையான நீரை மட்டுமே வேர் மூலம் உறிஞ்சி இதர பாகங்களுக்கு அனுப்பும். நெற்பயிருக்கு நீர் மறைய நீர் கட்டு; தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் செய்வதே அதிக மகசூலுக்கு அடிப்படை என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசன உத்தியை கடைபிடிக்கும் வகையில் மானிய உதவியும் அரசு வழங்குகிறது.
நெல்லில் சொட்டு நீர்ப்பாசனம் கையாண்டால் தனியாக நாற்றங்கால் அமைக்கத் தேவையில்லை. நேரடியாக நெல்லை விதைக்கும்போது குறைந்தளவு விதையே போதும். செலவும் குறைகிறது. பூச்சி, நோய் தாக்குதலும் குறைந்து 50 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். முறையாக பயிரின் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது கணக்கிட்டு நீர் அளிக்கப்படுகிறது. இதனால் கதிர் பிடித்த சிம்புகளின் எண்ணிக்கை அதிகமாவதுடன் ஒரே சீரான நெல்மணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. சாவி அல்லது பதர் எனப்படும் பொக்கு நெல் குறைவாகவே இருக்கும்.
நீர்ப்பாசனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். ஒரு எக்டர் பரப்புக்கு 3000 மி.மீட்டர் தண்ணீர் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்படும். பயிரின் தேவைக்கு தண்ணீர் தருவதால் களை உருவாகும் வாய்ப்பும் குறையலாம். உரச்செலவும் குறைந்து விடும்.
நெல் சாகுபடிக்கு அடுத்து தொடர் பயிராக பயறு வகைப்பயிர், காய்கறிப்பயிர், வரப்புப்பயிர், வேலிப்பயிர் என விதவிதமாக பயிரிடலாம். ஒரு ஏக்கர் நெல்லுக்கு நேரடியாக பாய்ச்சுவதை விட 3 ஏக்கர் நெற்பயிரில் கூடுதலாக நீர்ப்பாசனம் செய்யலாம். மின்சார செலவும் குறைவு.
இளங்கோவன், வேளாண் இணை இயக்குநர் காஞ்சிபுரம்98420 07125
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
Is this a recommended practice as per crop production guide of Tamil Nadu? Do you have any supporting research data from any Indian state Agricultural university to prove your claim? Please avoid false propaganda and kindly don't fool the public.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.