உடல் நலம் உங்கள் கையில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:00

இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, உடல்நலத்தைக் காக்கும் செலினியம் போன்றவை, நட்ஸ் வகை உணவுகளில் அதிகம் உள்ளது.

எனவே, தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு மற்றும் வேர்க்கடலை சாப்பிடுவதால், ஆரோக்கியம் மற்றும் இளமையுடன் உடலை வைத்துக் கொள்ள முடியும்.

காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். காலை உணவையும், இரவு உணவையும், 11:00 மணிக்கு மேல் சாப்பிடாமல், 8:00 - 9:00 மணிக்குள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

அதிக பசியின்போது, அதிகமாக உணவை சாப்பிடக் கூடாது. இது உடல்நலப் பிரச்னைகளையும், உடல் பருமனையும் ஏற்படுத்தும்.

தினமும் அளவாக காபி பருகுவதால், சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களை தடுக்கலாம். மேலும், தினசரி உணவில், கொழுப்பு, 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.

ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுவதில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு அதிகம் உள்ளது. எனவே, ஐந்து வகை பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள்.

பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், கேன்சர், இதய நோய்கள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

பருவமடைந்த பெண்கள், தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையலில் மட்டும் உப்பை பயன்படுத்தலாம்.

வாரத்தில், இரண்டு முறையாவது மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டில் ஒன்று, எண்ணெய் வகை மீனாக இருந்தால் நல்லது. ஏனெனில், கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒமேகா 3, பேட்டி ஆசிட், எண்ணெய் மீன்களில் அதிகம் உள்ளது.

குளிர் பானத்தை தொடர்ந்து பருகுவது, தொப்பை உண்டாவதற்கு முக்கிய காரணம். எனவே, 'டயட்' குளிர் பானங்களை அருந்தலாம் அல்லது ஜூசுடன் அதிக தண்ணீர் சேர்த்து பருகலாம்.

உணவை நன்றாக மென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

— எ.எஸ்.கோவிந்தராஜன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X