* பீட்ரூட் அல்வா செய்யும் போது, அதன் சிவப்பு நிறம் மாறாமலிருக்க, வினிகரில் முக்கி எடுத்து, நீரை வடிகட்டி நறுக்க வேண்டும்
* சமையலறை அலமாரியில் தட்டுகளை வாரம் இருமுறை வினிகர் கலந்த நீரால் துடைத்து வந்தால், பூச்சித் தொல்லைகள் அறவே நீங்கி விடும்
* வினிகர் சிறிது எடுத்து சூடான தண்ணீரில் கலந்து, ப்ளாஸ்க்கை மிருதுவான, நீளமான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால், அதன் உள்ளே ஏற்படும் கறைகள் நீங்கி விடும்
* சமையல் பாத்திரங்களிலுள்ள ஸ்குரு துருப்பிடித்து இருந்தால், வினிகரை இரண்டு சொட்டு விட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு திருகினால், சுலபமாக எடுத்து விடலாம்
* மைதா மற்றும் பொடி உப்பு தலா இரண்டு தேக்கரண்டி எடுத்து, அரை கப் வினிகர் விட்டு நன்கு குழைத்து, பித்தளை, தாமிர பாத்திரங்களில் தடவி விடவும். ஐந்து நிமிடங்களுக்கு பின் தேய்த்தால், பாத்திரங்கள், 'பளிச்'சென்று ஆகிவிடும்
* சுவரில் வெற்றிலை கறை படிந்த இடத்தில், வினிகரை ஊற்றி தேய்த்து கழுவினால் கறை மறைந்து விடும்
* ஒரு பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் எடுத்து, அதில், நான்கு மேஜை கரண்டி புளிக்கரைசல், வினிகர் கலந்த கலவையை, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். அக்கலவையை அழுக்கு படிந்த சமையல் மேடை மற்றும் சமையலறை தரையின் மூலை முடுக்குகளில் ஊற்றி துடையுங்கள். பின்னர், தண்ணீர் ஊற்றி கழுவினால் சமையலறை பளிச்சிடும்
* வினிகருடன் சாக் பவுடரை கலந்து, வாஷ்பேசினில் பூசி கழுவினால், கறை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.