வட கர்நாடகாவில், எல்லார்பூர், கெலாசே காட்டு பகுதி உள்ளது. இங்கு, ஆப்ரிக்க - ஹிந்து கலப்பின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன் போர்த்துகீசியர்களும், அரேபியர்களும் வியாபாரத்துக்காக, இந்தியா வந்தபோது தங்கள் வேலைகளை செய்வதற்கு அடிமைகளை, ஆப்ரிக்க நாட்டிலிருந்து அழைத்து வந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் தான் இவர்கள்.
இவர்களை, 'சித்தீஸ்' என அழைக்கின்றனர். இவர்கள் கன்னடியர் போல பழக்க வழக்கம் கொண்டிருந்தாலும், தங்களின் தனி மொழியை பேசி வருகின்றனர். மற்ற மதத்தினரையும் கலப்பு மணம் புரிந்து கொள்கின்றனர்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் கால்களை கழுவி, குடிக்க தண்ணீர் கொடுத்து வரவேற்பது, இவர்களின் பழக்கமாக உள்ளது.
— ஜோல்னாபையன்