மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எம்.டி.எஸ்., பிரிவுகளில் டில்லி 319, ஸ்ரீநகர் 225, மும்பை 182, திருவனந்தபுரம் 132, சென்னை 113, பெங்களூரு 110, கோல்கட்டா 90 உட்பட நாடு முழுவதும் 1675 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில உள்ளூர் மொழி எழுத, படிக்க தெரிந்திருப்பது அவசியம்.
வயது : 10.2.2023 அடிப்படையில் எம்.டி.எஸ்., 18 - 25, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள்/ எஸ்.சி., / எஸ்.டி., ரூ.50.
கடைசிநாள் : 10.2.2023
விபரங்களுக்கு : mha.gov.in/notifications/vacancies