நடைபெற்று முடிந்த 'ஆட்டோ எக்ஸ்போ'வில் 'ஹெக்ஸால் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'பபுல்' என்ற மின்சார பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓட்டுனர் உட்பட கிட்டத்தட்ட 42 பேர் பயணிக்கும் அளவிற்கு இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 9,535 மி.மீ., நீளத்திலும், 2,388 மி.மீ., அகலத்திலும் இருப்பதால், பயணியருக்கு தாராளமானஉட்புற இடம் கிடைக்கிறது.
இந்நிறுவனம், மாதம் 5 பேருந்துகளை தயாரிக்க உள்ளதாகவும், போகப்போக அதை 25 ஆக அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 5,000 பேருந்துகளை தயாரிக்கும் அளவிற்கு கட்டமைப்பை மேம்படுத்தஉள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மின்சார பேருந்தின் விலை மற்றும் இதர விபரங்கள் குறித்து எந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை.
விபரக் குறிப்புடாப் ஸ்பீடு 75 கி.மீ.,பயணிகள் 41 + 1ரேஞ்ச் 85 கி.மீ., / 250 கி.மீ.,மொத்த எடை 8,900 கி.கி.,டார்க் 560 என்.எம்.,
விபரக் குறிப்புடாப் ஸ்பீடு 75 கி.மீ.,பயணிகள் 41 + 1ரேஞ்ச் 85 கி.மீ., / 250 கி.மீ.,மொத்த எடை 8,900 கி.கி.,டார்க் 560 என்.எம்.,