அண்மையில் 'நோக்கியா சி12' எனும் நுழைவுநிலை ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த 2021ல் அறிமுகம் செய்யப்பட்ட 'சி 10' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த 'சி12' அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போன் 'சி' வரிசையில் வந்த மற்ற போன்களை விட, பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, எதிர்பாராமல் கீழே விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள், முந்தைய போன்களை விட குறைவாகவே இருக்கும். இந்திய சந்தையில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்
6.3- அங்குல எச்.டி+ டிஸ்ப்ளே
3,000 எம்.ஏ.எச்., பேட்டரி
5 மெகா பிக்சல் செல்பி கேமரா
8 மெகா பிக்சல் முதன்மை கேமரா
2 ஜி.பி., + 64 ஜி.பி.,
ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்
புளூடூத் 5.2 இணைப்பு வசதி
மூன்று வண்ணங்கள்
எடை 177.4 கிராம்
விலை: 10,500 ரூபாய்