அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்மின்' நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்சுகள் புகழ்பெற்றவை. இந்நிறுவனம், அதன் ஜி.பி.எஸ்., மற்றும் 'பிட்னஸ் டிராக்கிங்' தொழில்நுட்பங்களுக்காக பெயர் பெற்றதாகும்.
தற்போது இந்நிறுவனம், அதன் 'வெனு 2 பிளஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சுக்காக, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, இ.சி.ஜி., செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த செயலியானது, பயனர்களின் இதயத் துடிப்புகளை, கடிகாரத்தில் இருக்கும் சென்சார்களைப் பயன்படுத்தி, கண்காணிக்க உதவும்.
இதற்கு முன் சில நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை வாட்சுகளில் வழங்கி இருப்பினும், இது, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலியின் வாயிலாக, பயனரின் இதயத் துடிப்பை 30 வினாடி நொடிகளில் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.
இது குறித்த தரவுகளை, ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக, மருத்துவருக்கு உடனடியாக அனுப்ப இயலும்.
தற்போது இந்த வசதி அமெரிக்காவில், அதன் வெனு 2 பிளஸ் ஸ்மார்ட்வாட்சில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் பிற நாடுகளுக்கும், அந்நாடுகளின் அனுமதிகளைப் பெற்று அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.