தொழில்நுட்பம் கால்வைக்காத இடமே இல்லை என்றாகிவிட்டது. ஒரு காலத்தில் சாக்பீஸ், பலப்பம் கொண்டு எழுதி வந்த 'சிலேட்டு'கள் கூட, இன்று ஸ்மார்ட் 'சிலேட்டு'களாக மாறிவிட்டன. 'போர்ட்ரோனிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'ரப் பேட் 15எம்' எனும் ஒரு 'ஸ்மார்ட் ரைட்டிங் பேடு' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது காகிதப் பயன்பாட்டையும் ஓரளவு குறைக்க பயன்படும் என்பது கூடுதல் சிறப்பு.
சிறப்பம்சங்கள்:
*வண்ணமயமான டிஸ்ப்ளே பேனல்
* 15 அங்குல எல்.சி.டி., திரை
* எழுதியது அழியாமல் இருக்க ஸ்மார்ட் லாக்
* எழுதியவற்றை செயலி வாயிலாக போனில் சேமிக்கலாம்
* 6.6 மி.மீ., தடிமன்
* 340 கிராம் எடை
* பல மாதங்கள் நீடிக்கும் பேட்டரி
விலை 1,399 ரூபாய்