புயலைக் கிளப்பும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2011
00:00

உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப்பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையாகியுள்ளன. இதுவரை தன்னுடைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என சாம்சங் அறிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே இந்த போன் கிடைக்கிறது. இந்த அளவிற்கு விற்பனையானதும் அந்த நாடுகளில் தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் இன்னும் இவை விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. மற்ற நாடுகளிலும் இது அறிமுகப்படுத்தப் படுகையில் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரியாவில் தான் இதற்கு அதிக எதிர்பார்ப்பு.
நம் நாட்டிலும் இது கிடைக்கிறது. இந்த அளவிற்கு விரும்பப்படும் வகையில் இதன் சிறப்புகளைப் பார்க்கலாமா! மல்ட்டி டெஸ்க்டாப் இடைமுகத்துடன் ஆண்ட்ராய்ட் வி2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் 1.2எஏத் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் கார்டெக்ஸ் (Cortex) ப்ராசசர், 1 ஜிபி ராம் நினைவகத்துடன் தரப்பட்டுள்ளது. போன் மெமரி 16ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். கருப்பு வண்ணத்தில், பார் டைப்பில் ஒரு சிம் இயக்க போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புக்கான கேமராவும், பின்பக்க கேமராவும் உள்ளன. வழக்கமான கேமரா 8 எம்பி திறன் கொண்டது. டிஜிட்டல் ஸூம் மற்றும் டிவி அவுட்புட் வசதிகளுடன் இது இயங்குகிறது.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் என தொடர்பு வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ இசைப் பிரியர்களுக்கென உள்ளன. 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப்பி னைத் தருகின்றன.
4.3 அங்குல சூப்பர் AMOLED ஸ்கிரீன் திரை நம் விழிகளுக்கு விருந்தளிக்கிறது. 8.49 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட வகையில் மிக மிக ஸ்லிம்மான போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ.29,000.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜ்குமார் - puducherry,இந்தியா
30-ஜூலை-201111:01:33 IST Report Abuse
ராஜ்குமார் your paper news was really good, I want how download the "windows7" free for my system and please attach the mobile malar in computer malar. thank you
Rate this:
Share this comment
Cancel
Ranjith - Qatar,இந்தியா
29-ஜூலை-201116:20:43 IST Report Abuse
Ranjith Its an extraordinary mobile.I'm using it for the last one month.U guys just go for it.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X