துணை ராணுவப்படைகளில் ஒன்றான தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : கான்ஸ்டபிள் பிரிவில் டிரைவர் 183, டிரைவர் கம் பம்ப் ஆப்பரேட்டர் 268 என மொத்தம் 451 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 22.2.2023 அடிப்படையில் 21 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 22.2.2023
விபரங்களுக்கு : cisfrectt.in