பச்சை வாழை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான மணல் கலந்த களி மண் நிலத்தில், பல வித வாழை சாகுபடி செய்துள்ளேன். இதில், பச்சை வாழை பழ ரகமும் ஒன்றாகும்.
இந்த வாழை ரகம், குறித்த உயரத்தில் வளரும் தன்மை உடையது. ஆகையால், மாடித்தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் வளர்க்கலாம். பத்து மாதங்களுக்கு பின் வாழை அறுவடைக்கு வரும்.
குறிப்பாக, பிற ரக வாழை பழங்களை போல், குறைந்த காய்கள் இருக்காது. நாம் அளிக்கும் ஊட்டத்தில், ஒரு வாழைத்தாரில், 20 'சீப்' வாழை பழங்கள் வரையில் கூட மகசூல்ஈட்டலாம்.
அதிக வருவாய் ஈட்டுவதற்கு சாகுபடி செய்ய நினைக்கும், அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும், பச்சை வாழை சாகுபடி உகந்த ரகம் என, கூறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 89391 88682