இடைவெளி காய்கறி சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி விவசாயி எஸ்.கோகுல் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான நிலத்தில், ஒற்றை நாற்று நடவு முறையில், துாயமல்லி, சீரக சம்பா ஆகிய பாரம்பரிய ரக நெல் நடவு செய்து, நல்ல மகசூலை எடுத்து வருகிறேன்.
அந்த வரிசையில், இடைவெளி மேட்டுப்பாத்தி மீது வைக்கோல் துாவி, வெண்டை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த செடிகளின் இடைவெளியில், எந்த செடி வளருமோ அந்த செடிகளை சாகுபடி செய்யலாம்.
உதாரணமாக, வெண்டை செடி உயரமாக செல்லும் போது, அந்த செடிகளின் கீழே கீரை, கொத்தமல்லி, புதினா ஆகிய கீரை வகைகளை சாகுபடி செய்யலாம்.
இதன் மூலமாக, இரு விதமாக வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கிறது. மேலும், சிறிய அளவு இடமாக இருந்தாலும் அதில் எந்தரகம் பயிரிட்டால் வருவாய் ஈட்டலாம் என, புதிய தொழில் நுட்பத்தை விவசாயிகள் கற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எஸ்.கோகுல், 90878 02435