பி.எம்.டபுள்யு., நிறுவனம், அதன் 'எக்ஸ் 1' எஸ்.யு.வி., காரை மாற்றியமைத்து மீண்டும் களமிறக்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு வகைகளிலும் இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ் 1 கார், பழைய எக்ஸ் 1 காரை விட, அனைத்து பரிமாணங்களிலும் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல் வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., லைட்டுகள், நேர்த்தியான ஹெட் லைட்டுகள், மெலிதான டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை காரின் அழகை மெருகூட்டுகின்றன.
பி.எம்.டபுள்யு.,வின் புதிய '7 சீரிஸ்' மற்றும் '3 சீரிஸ்' கார்களில் இருப்பதைப் போன்ற 10 அங்குல 'கர்வ்டு டிஸ்ப்ளே இன்போடெயின்மென்ட்' அமைப்பு, சாவி இல்லாமல் திறப்பதற்கான டிஜிட்டல் சாவி வசதி, 476 லிட்டர் 'பூட் ஸ்பேஸ்' ஆகியவை இந்த காரின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
எக்ஸ்.1 பெட்ரோல் வகை காரின் விலை, 45.90 லட்சம் ரூபாயாகவும், டீசல் வகை 47.90 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு:
கார் வகை - எக்ஸ் 1 எக்ஸ் 'லைன்' - எக்ஸ் 1 எம் ஸ்போர்ட்
எரிபொருள் - பெட்ரோல் - டீசல்
இன்ஜின் - 1,499 சி.சி., 3 சிலிண்டர் - 1995 சி.சி., 4 சிலிண்டர்
ஹார்ஸ் பவர் - 135 பி.எஸ்., - 149 பி.எஸ்.,
டார்க் - 230 என்.எம்., - 360 என்.எம்.,
மைலேஜ் - 16.3 கி.மீ., - 20.37 கி.மீ.,
1 - 100 கி.மீ., பிக் - அப் - 9.2 வினாடிகள் - 8.9 வினாடிகள்