தேன் இருக்க கவலை எதற்கு?
* தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை, தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டு வர, நுரையீரல், இதயம் பலப்படும்
* தினமும் காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள, 'டாக்ஸின்'கள் - நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
* குளிர் காலத்தில் உணவில் சர்க்கரையின் அளவை குறைத்து, தேனை சேர்த்துக் கொண்டால், வறட்டு இருமல், தொண்டைப் புண் போன்றவை ஏற்படாது
* கடலை மாவுடன் தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, காய்ந்ததும் கழுவவும். இதுபோல், மூன்று நான்கு முறை செய்ய, வியக்கத்தக்க மாற்றம் அமையும்
* நன்னாரி வேரை பொடியாக்கி தேனில் கலந்து, தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை குறையும்
* நெல்லிக்காய், ஏலக்காய் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட, இருமல் நீங்கி விடும்
* வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும்
* அத்திப்பழத்துடன் தேன், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கருச்சிதைவை தடுக்கலாம்
* பால் புகட்டும் தாய்மார்கள், தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும், நான்கு பூண்டு பற்களும் சேர்த்து பருகி வர, தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்
* வெந்நீரில், நான்கு மிளகு, சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து, தேன் கலந்து குடித்து வர தொண்டைக்கட்டு குணமாகும்
* இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, மார்பு வலி குணமாகும்
* சீரகம், திப்பிலி, 20 கிராம் எடுத்து, நன்றாக அரைத்து தேனில் கலந்து உட்கொண்டால், விக்கல் உடனே நின்று விடும்
* இஞ்சியை நறுக்கி தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
* காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனும், அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிட்டு வர, கை, கால் நடுக்கம் கட்டுப்படும்
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
- எஸ். சீதாலட்சுமி