உலகில்
நீ பாடம் புகட்டும் மேதையாய் இரு
இல்லையேல் பாடம் கற்கும்
மாணவனாய் இரு!
பாடம் புகட்ட போகிறாய் என்றால்
உன் வாழ்க்கையை உற்று நோக்கு
பாடம் கற்க போகிறாய் என்றால்
பிறர் வாழ்க்கையை சற்று நோக்கு!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நமக்குள் நாம் தான்
உருவாக்கி கொள்ள வேண்டும்
மகிழ்ச்சிக்கான கருவாக்கல்களை!
எதிலும் பிறர் மீது எளிதில்
குற்றம் சுமத்திடல் முடியும் - ஆனாலும்
ஆராய்ந்து முடிவெடு போதும்
பிறரை வெறுக்கும் பாங்கு
யாவர்க்கும் தீங்கு பல்லுயிர்க்கும்
அன்பென்பதே அடிநாதம்!
ஒருவரது வாழ்க்கை மட்டுமல்ல
இறப்பும் கூட பாடம் புகட்டும்
பல வி(னோ)த மனித மனங்களையும்
பிம்பமாய் காட்டும்!
வெற்றியில் மட்டுமல்ல
தோல்வியிலும் கற்க வேண்டியது
நிறையவே இருக்கிறது
வெற்றிக்கான நுணுக்கத்தை ஆராய்ந்தால்
ஒருவரது வீழ்ச்சியும் பாடம் தான்
மற்றொருவரின் சூழ்ச்சியும் பாடம் தான்!
யாரும் இங்கு புத்தனுமில்லை
ஞானம் பெற தேவையுமில்லை
மனிதம் பற்றிய தெளிவு மட்டும் போதும்
பார் போற்றும் மனித நேயத்தோடு
நல்ல மனிதர்களாக இருந்தாலே போதும்காயமின்றி கடந்து போகலாம்
ஒவ்வொருவரும் அவரது வாழ்க்கைக்கான
வெற்றி சூத்திரங்களோடு!
- டி.சிவகார்த்தி, புறத்தாக்குடி, திருச்சி.