* 'அன்புக்கு உரியவரின் மரணச்செய்தியை தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கும் வலி மிகுந்த நிகழ்வு யாருடைய வாழ்விலும் வரக்கூடாது என்பதே என் யாத்திரையின் நோக்கம்!' - ராகுல் காந்தி. ஆனா பாருங்க ஜி... நீங்க யாத்திரை துவக்கின தமிழகத்துல, அலட்சியமா ஒரு கட்டடத்தை இடிச்சு ஒரு பெண்ணை கொன்னுட்டு தாய் தகப்பனுக்கு போன் போட்டுட்டோம்!
* 'எங்கள் மாணவர்களின் தேவை எங்களுக்குத்தான் தெரியும்; அவர்களின் எதிர்காலத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள்'னு கனிமொழி கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை வைச்சப்போ, 'தமிழக மாணவர் நலனுக்காக போராடும் தலைவர்களின் வீட்டு குழந்தைகள் மாநில பாடத் திட்டத்தில் பயில்பவர்களா'ன்னு மனசுல ஒரு கேள்வி!
* 'முறையாக பராமரிக்கப்படும் தமிழக சட்டம் ஒழுங்கு, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது!' - நீங்கள் சொல்வது உண்மை எனில், 'தமிழக மக்கள் சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்' - இதுவும் உண்மை எனில், 'கொள்ளை போனவற்றை மீட்பதில் ஏற்படும் தாமதம் நீதிக்கான பிழை' எனும் அறிவுரை எதற்காக முதல்வரே?
* 'தனியார் மருத்துவமனைகளின் நவீன வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன'ன்னு அரசு சொல்றப்போ, பிறவி இதயநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை தர்றதுக்கும், அரசு மருத்துவ குழுவினருக்கு சிறப்பு பயிற்சி தர்றதுக்கும் தனியார் மருத்துவமனையோட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?
சொல்லுங்க... பேனாவால எழுதிடுறேன்!