அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்மின் ' நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சுகள் புகழ் பெற்றவை. ஜி.பி.எஸ்., மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தொழில் நுட்பங்களுக்கு பெயர் பெற்றது. தற்போது, 'விவோமோவ்' சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 'கார்மின் விவோமோவ் டிரென்ட்' என்று அழைக்கப்படுகிறது.
இதில், இதயத் துடிப்பு, ஆக்சிஜன் அளவு மற்றும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி போன்றவற்றை கண்காணிக்கும் வசதிகள் உள்ளன. மேலும், மன அழுத்தம், துாக்கம் மற்றும் நாம் அருந்தும் நீர் ஆகாரங்களின் அளவு ஆகியவற்றைக் கண்காணிக்கும் திறனும் கொண்டது. பல வண்ணங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் ஆகியுள்ளது. விரைவில் பிறநாடுகளின் சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும்.
சிறப்பம்சங்கள்:
* எல்.சி.டி., திரை
* 5 மீட்டர் வரை தண்ணீர் புகா திறன்
* இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ்.,
* வானிலை எச்சரிக்கை வசதி
* புளூடூத் இணைப்பு
* வயர்லெஸ் சார்ஜிங் பேடு
விலை: 22,000 ரூபாய்