'ஸ்மார்ட் எலக்ட்ரிக்' சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் 'நாய்ஸ்' நிறுவனம், தன்து புதிய ஸ்மார்ட் வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'நாய்ஸ் பிட் போர்ஸ்' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச், இம்மாதம் 3 ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு வட்ட வடிவ ஸ்மார்ட்வாட்ச் ஆகும். தண்ணீர், துாசி மற்றும் கீறல்களைத் தாங்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதய துடிப்பு மானிட்டர், ஆக்ஸிஜன் அளவு சென்சார், ஸ்லீப் டிராக்கர், ஸ்டெப் கவுன்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கெட், ஹாக்கி, மலையேற்றம் உள்ளிட்ட பல ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.32- அங்குல டிஸ்ப்ளே
* புளூடூத் காலிங்
* கேமரா ரிமோட் கண்ட்ரோல்
* ஏ.ஐ., வாய்ஸ் அசிஸ்டென்ட்
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
* 150 விதமான முக அமைப்பு
* மூன்று வண்ணங்கள்
விலை: 2,499 ரூபாய்