'பயர்-போல்ட்' நிறுவனம், இந்திய சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில், 'பயர்-போல்ட் டாக் அல்ட்ரா' மாடல் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 'பயர்போல்ட் சாட்டர்ன், டால்க் 3, நிஞ்சா பிட்' எனும் இந்த மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும், மேம்பட்ட ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வெதர் அப் டேட்கள், கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பயர்போல்ட் சாட்டர்ன் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் வகையிலானதாகும். டயல் அளவு உள்ளிட்ட ஒரு சில வித்தியாசங்களை தவிர, பெரும்பாலும் ஒரே மாதிரியான வசதிகளையே கொண்டுள்ளன.
பொதுவான அம்சங்கள்
* ஐ.பி., 68 வாட்டர் ரெசிஸ்டென்ட்
* குயிக் டயல் பேடு
* புளூடூத் காலிங்
* இன்பில்ட் மைக்
* ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்ஸ்
* 110 ஸ்போர்ட் மோடுகள்
விலை: 1,299 முதல் 3,299 ரூபாய் வரை