அண்மையில் 'ஸ்டப்கூல்' நிறுவனம், இந்தியாவில், 'போல்டபிள் 3 இன் 1 மேக்னட்டிக் ஒயர்லெஸ்' சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
'ஸ்டப்கூல் ஸ்டாக்' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சார்ஜரை, பயன்படுத்தாதபோது மடக்கி வைத்துக் கொள்ளலாம்.
ஒரே சமயத்தில் 3 சாதனங்களை இதில் சார்ஜ் செய்யலாம். மூன்று மேக்னட்டிக் சார்ஜர்கள் கொண்ட இந்த சாதனத்தை, எளிதாக மடக்கி வைத்துக் கொள்ளலாம்.
இதில் க்யு.ஐ., சான்றிதழ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும் ஐபோன் 12,13,14 மாடல் போன்களையும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்த சார்ஜர் ஸ்மார்ட்போன்களுக்கு 10 வாட் வேகமும், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்களுக்கு 3 வாட் வேகமும், ஆப்பிள் வாட்சுக்கு 2.5 வாட் சார்ஜிங் வேகமும் வழங்குகிறது.
விலை: 4,990 ரூபாய்.