இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2011
00:00

தேவை தனி உ.பா. பார்ட்டி!
அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாங்கிய என் நண்பர், தன் அலுவலக சகாக்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் சிறப்பு விருந்து வைத்தார். முன்னிரவு பொழுதில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில், பிரியாணி, சிக்கன், "65' என, தடபுடலாக நடந்த விருந்தில், உ.பா., ஆர்வலர்களுக்காக, தாராளமாக உ.பா., சப்ளையும் செய்யப்பட்டது.
உ.பா., அருந்தி வந்த நண்பர்கள், ஓரமாக ஒரு வரிசையில் அமர்ந்து, பிரியாணியை மொசுக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், கையில் எடுக்கும் சாப்பாட்டை வாயில் வைக்கவே தடுமாறினார்.
அவரை, அப்படியே தனியே அழைத்துச் சென்று விடலாம் என முனைவதற்குள், அப்படியே மயங்கி, சாப்பாட்டின் மேல் அலங்கோலமாகக் கவிழ்ந்து விட்டார். இதைப் பார்த்த மற்ற விருந்தினர்கள், முகம் சுளித்ததோடு, சாப்பிடாமலே மெல்ல நகர்ந்து விட்டனர்.
விழாக்கள், விருந்துகள் நடத்துவோரே... உங்கள் நண்பர்களை குஷிப்படுத்த உ.பா., பார்ட்டி கொடுப்பதை விமர்சிக்க விரும்பவில்லை. ஒட்டுமொத்த விருந்தினர்களோடு நடக்கும் பந்தியில், உ.பா., ஆசாமிகளை இரண்டறக் கலக்க விடாமல், அவர்களுக்கு வேறொரு நாள், தனியாக உ.பா., பார்ட்டி வைக்கலாமே!
— ஆர்.தணிகைவேல், தாம்பரம்.

வரவேற்கக்கூடிய முயற்சி!
குப்பை தொட்டியை விட்டு விட்டு, தெரு முனையில் காலியாக இருந்த ஒரு இடத்தில், எல்லாரும் குப்பையைக் கொட்டி வந்தனர். இதனால், தெருவே அலங்கோலமாக காட்சி அளித்ததோடு, காற்றடித்தால் தெரு முழுக்க குப்பை பறப்பதும், கொசுத் தொல்லையும் அதிகரித்தது. அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் எத்தனையோ முறை சண்டையிட்டும், பயனில்லாமல் போனது.
சில மாதங்களுக்கு முன், ஒரு முதியவர் அந்த இடத்தை, அவர் ஒருவராகவே சுத்தம் செய்து, மணல் பரப்பி, மேடு படுத்தி, சாண நீர் தெளித்து, அதைச் சுற்றி கயிறு கட்டி, சில நாளிதழ்களை தொங்க விட்டார். அதன்பின், வீடு வீடாக சென்று, பழைய வார, மாத இதழ்களையும் வாங்கி தொங்கவிட்டு, ஒரு படிப்பகம் போல மாற்றி விட்டார்.
எங்கள் தெருவில் பேப்பர் போடும் நபரிடம், அட்வான்ஸ் ஏதும் கொடுக்காமல், "இந்த மாதம் முழுவதும், ஏதாவது, இரண்டு நாளிதழை, தினமும் காலையில் தவறாமல் போடுங்கள். மாத முடிவில் நான் எப்படியாவது பணம் புரட்டி தந்து விடுகிறேன்...' என்றார். முடிவில், அந்த காலி மனைக்கு பக்கத்தில் இருந்த வீட்டுக்காரர்களே நாளிதழ்களுக்கும், சில வார இதழ்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இப்போது, அந்த இடம் முழு நேர படிப்பகமாகவே மாறி விட்டது.
அந்த முதியவரின் முயற்சி, சற்று வித்தியாசமாக படவே, என் பங்கிற்கு நானும், ஒரு வார இதழுக்கு பொறுப்பேற்றுள்ளேன்.
— தி.குருலெட்சுமி, அருப்புக்கோட்டை.

நாமும் செய்யலாமே!
போக்குவரத்து துறையில் பணியாற்றும், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் கையில், டிரைவிங் லைசன்ஸ், ஏ.டி.எம்., மற்றும் பான்கார்டு போன்றவற்றை, ஒரு கவரில் போட்டு, அதில் பெறுநர் முகவரி மட்டும் குறிப்பிட்டு, ஒரு ரூபாய் தபால் தலை மட்டும் ஒட்டினார்.
"இவை யாருடையவை?' என்ற என் கேள்விக்கு, அவர் கூறிய தகவல் என்னை மிகவும் நெகிழ வைத்தது.
"சில நேரங்களில், பிக்பாக்கெட் ஆசாமியிடம் பறி கொடுத்த அல்லது மறதியால் விடப்பட்ட மணிபர்ஸ், பைகளில் பணம் மட்டும் இருக்காது; மற்ற முக்கிய ஆவணங்கள் மட்டும் இருக்கும். நான் போக்குவரத்து துறையில் பணியாற்றுவதால், அவ்வாறு கிடைக்கும் பொருட்களை, சக ஊழியர்கள் என்னிடம் தருவர்.
"காரணம் நேரிடையாக தொடர்பு கொண்டு, உரியவரிடம் சேர்க்க இயலாது; அதில், பல சிக்கல்கள் உள்ளன. பணத்துடன் முக்கிய ஆவணங்கள் இழந்து தவிப்பவர்களுக்கு, உதவியும் செய்ய வேண்டும், சிக்கலும் வரக் கூடாது.
"அதாவது, தண்ணீரில் விழுந்த தேளை காப்பாற்ற நினைத்து செயல் படுவது போல, நமக்கு எந்த பாதிப்பும் வராமல், நன்மை செய்தோம் என்ற பெருமிதம் மட்டும் கிடைக்க வேண்டும்.
"மேலும், ஒரு ரூபாய் ஸ்டாம்பு மட்டும் ஒட்டுவதால், நமக்கு ஒரு ரூபாய் மட்டும் தான் செலவு. குறைவான தபால் தலை ஒட்டியதால், கண்டிப்பாக உரியவரிடம், "பைன்' வசூலிக்க, "ரிஜிஸ்டர் போஸ்ட்' போல் போய் சேரும்...' என்று கூறினார்.
இதை கேட்ட நான், இவ்வாறு கிடைத்தால், எந்தவித சிக்க<லுக்கும் ஆளாகாமல் நாமும், உதவி செய்ய இயலும் என்பதை உணர்ந்தேன்.
— வி.முத்துவேலன், போரூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.karthik natarajan - chennai,இந்தியா
04-ஆக-201112:49:08 IST Report Abuse
G.karthik natarajan குப்பை மேடுகளில் இருந்துதான் கோபுரம் உதயமாகிறது .
Rate this:
Share this comment
Cancel
R.KUMARAVEL - chennai,இந்தியா
03-ஆக-201108:07:02 IST Report Abuse
R.KUMARAVEL real ITHU UNGAL EDDAM - FINE
Rate this:
Share this comment
Cancel
02-ஆக-201115:14:49 IST Report Abuse
ஏ.சேஷாத்ரி ஸ்ரீனிவாசன் மனமிருந்தால் மனிதன் கூட தெய்வமாகலாம் ..., என்ற வைர வரிகளுக்கு பொருத்தமாக ஒரு குப்பை மேட்டை கோபுரமாக ஒரு அறிவுக் கோவிலாக மாற்றிய அந்த முதியவரின் வழியில் நாமும் நம் சுற்றுபுறம் தூய்மையாகவும் அது போலவே படிப்பகம் செய்து இளையதலைமுறைக்கு வழி காட்டலாமே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X