அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2011
00:00

திண்ணை பகுதிக்கான மேட்டர்களை, அலுவலகத்தில் அளித்து விட்டு, அவசரமாகக் கிளம்பிய நடுத்தெரு நாராயணனை இழுத்துப் பிடித்து, "ஏதாவது நாலு செய்திகள் சொல்லி விட்டுப் போங்கள். இன்று நானும், "மேட்டர்' முடித்துக் கொடுக்கணும்!' என்றேன்.
"இதோ... கேட்டுக்கோ...' என்றபடியே ஆரம்பித்தார்...
"ஏர்போர்ட் என்றும், ஏரோட்ராம் என்றும் விமான நிலையத்தைக் குறிப்பிடுகிறோம்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?' எனக் கேட்டவர், என் பதிலை எதிர்பாராமல், அவரே சொன்னார்...
"ஏர்போர்ட்டில் சுங்கச் சோதனைச் சாவடியும், பாஸ்போர்ட் பரிசோதனை அலுவலகமும் இணைக்கப்பட்டுள்ளது; ஏரோட்ராமில் அது கிடையாது...' என்றவர் —
"வக்கீல்கள், வக்கீல் தொழில் மட்டுமே செய்து, பெயர் வாங்க வேண்டும் என்பதில்லை... கஸ்தூரி ரங்க அய்யங்கார், இந்து பத்திரிகையைத் தொடங்கினார். ராஜாஜி, அரசியலில் குதித்தார். கா.சி.வேங்
கடரமணி, கதை, கட்டுரைகள் எழுதி, பெயர் பெற்றார். சர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர், திவானாக ஆனார். பெ.நா.அப்புசாமி, விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி, புகழ் பெற்றார். பம்மல் சம்பந்த முதலியார், நாடக ஆசிரியராக, "ஓகோ'வென்று இருந்தார்...' எனக் கூறி விட்டு, "ஆணின் பெயரை அப்படியே கேள்வித் தொனியில் மாற்றினால், பெண் பெயராகி விடும்... தெரியுமா?' எனக் கேட்டார்.
நான், திரு, திருவென விழிக்க, "சலீம் என்பது ஆணின் பெயர். இதை அப்படியே கேள்வி தொனியில் மாற்று... சலீமா வந்து விடுகிறது அல்லவா? பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் பெயர்களை இப்படி கேள்வி தொனியில் மாற்றினால், பெண்ணின் பெயராகி விடும். சொல்றேன் பார்...
ஜலீல் - ஜலீலா
ஜெமீல் - ஜெமீலா
நஷீர் - நஷீரா
பஷீர் - பஷீரா
வஹித் - வஹிதா
கலில் - கலீலா
லத்தீப் - லத்தீபா
ஜூனைத் - ஜூனைதா... போதுமா மேட்டர்...' எனக் கேட்டு, என் பதிலுக்குக் காத்திருக்காமல் ஓட்டம் பிடித்தார்!
***
சர்க்கரை நோயுள்ளவர்களை, சில மருத்துவர்கள் எப்படி, "கரைத்து' எடுக்கின்றனர் என்பது குறித்து, மதுரை வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் இதோ —
பெரும்பாலான மக்கள், சர்க்கரை நோய்க்கு கீரை, பாகற்காய் போன்றவற்றை மருந்துகளாக பயன்படுத்தும்படி மாறி விட்டனர். அதற்கு பல காரணங்கள் உண்டு. நாங்களும், எங்கள் குடும்ப அன்பர்களும் இதற்கு மாறியதற்கான காரணத்தை தெளிவு
படுத்துகிறேன்.
ஆசிரியராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற என், 62 வயது தந்தை சர்க்கரை வியாதியால் சிரமப்பட்டு வந்தார். மதுரையில் ர்க்கரை வியாதிக்கென்றே மருத்துவமனை கட்டியுள்ள மிக பிரபலமான ஒரு டாக்டரிடம், ஆறு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை ஒருபுறமிருக்க, என் தாயாரின் வற்புறுத்தலின் பேரில், தினமும் பாகற்காயும், முழு நெல்லிக்காய் சாறு வெறும் வயிற்றிலும்; அரிசி, இனிப்பு போன்றவற்றை தவிர்த்து, கேப்பை, கோதுமை, வரகரிசி போன்றவற்றில் செய்யப்படும் உணவுகளை உண்டு வந்தார்.
மருத்துவமனையிலோ மாதா, மாதம் எடுத்த ஷûகர் அளவு கூடவே, 15 நாட்களுக்கு ஒருமுறை, வாரம் ஒருமுறை என மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுக்கக் கூறினர். பின், "ஷûகர் மிகவும் கூடி விட்டது... தினமும் இன்சுலின் போட வேண்டும்...' என்ற, "லெவலுக்கு' கொண்டு வந்து நிறுத்தினர்.
ஒரு சிறிய சந்தேகத்தில், வெளியில் உள்ள ரத்தப் பரிசோதனை மையத்தில், மருத்துவமனையில் ரிசல்ட் எடுத்த அடுத்த நாளில் எடுத்தோம். ரிசல்ட்டை பார்த்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். காரணம்: ஷûகர் நார்மலாக இருந்தது. தன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக, பொய்யான ரிசல்டை டைப் செய்து கொடுத்துள்ளனர்.
டாக்டர் படிப்பை மக்களுக்கு சேவை செய்ய படித்தது போய், அவர்களே வெறும் பணத்திற்காக இப்படி கேவலமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
தற்போது என் தந்தையோ, தானே ஷûகர் அளவை பார்த்துக் கொள்ளும் கருவி வாங்கி வைத்து, மாதம் ஒருமுறை ஷûகர், "செக்-அப்' செய்து, வாக்கிங், டயட்டிங், இயற்கை உணவு போன்றவற்றை கடைபிடித்து நலமாக இருக்கிறார்.
இத்தகவலை தங்களிடம் ஏன் தெரிவிக்கிறேன் என்றால், மதுரை மட்டுமல்ல, இன்னும் பல தொலைவான ஊர்களிலிருந்து இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களை காப்பாற்ற (இந்த வசூல்ராஜாவிடம் மட்டும் இருந்து மட்டும் இல்லை... அவர்கள் உயிரையும் சேர்த்து தான்!) எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பின்குறிப்பு: இக்கடிதத்துடன் மருத்துவமனையில் எடுத்த ரிப்போர்ட்டையும், வெளியில் எடுத்த பல ரிபோர்ட்களில் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளேன். என் தந்தையின் பெயரையும், மருத்துவமனையின் பெயரையும் விஜயகாந்த் போல, "ரமணா'வாக இருந்திருந்தால், வெளியிட்டிருப்பேன்!
— ஆயிரம் நல்ல மருத்துவர்களுக்கு நடுவில், இப்படியும் சில புல்லுருவிகள்; இவர்கள் இப்படி சம்பாதிக்கும் காசு, அமெரிக்கா வில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்கு அழுது, தமக்கு வைத்தியம் பார்க்கத் தான் ஆகப் போகிறது!
***

பேராசிரியையாக உள்ள ஒரு வாசகி நெல்லிக்காயின் மகத்து வத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதில், குறிப்பாக, நெல்லிக்காய் ஆண்களுக்கு எப்படி மிக, "முக்கிய'மாக உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். படித்துப் பயன் பெறுங்களேன்...
அலர்ஜி தொல்லையால் எனக்கு மூச்சிரைப்பு, அடிக்கடி பலவீனமாதல் என்று சின்ன, சின்ன தொல்லைகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால், இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். இது போக, பெண்ணானதால் என்னால், "ஓப்பனாகச்' சொல்ல முடியாத பலன் ஒன்றும் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ள அனைவரும் கட்டாயம் ஏதேனும் ஒரு வழியில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது மிக, மிக நல்லது - குறிப்பாக ஆண்கள்!
தீராத வாய்ப்புண் உள்ளவர்கள், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை டம்ளர் மணத்தக்காளி ஜூஸ் சாப்பிட்டால், மாலைக்குள்ளேயே புண்வலி குறைந்து விடும்; இது போல் இரண்டு, மூன்று முறை சாப்பிட்டால் வாய்ப்புண் என்பதே வராது! வாய்ப்புண் மிகவும் அதிகமாக வந்து டாக்டர்கள் எல்லாம் வேறு ஒன்றுமே செய்ய முடியாது என்று கை விட்டு விட்ட நிலையில், பரீட்சை எழுத முடியாமல் போய் மிகவும் சிரமப்பட்டு, பின் நானே கண்டுபிடித்த வைத்தியம் இது. மணத்தக்காளி கீரையை கூட்டாக, பொரியலாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட உடனே, நிவாரணம் கிடைத்து விடும்.
நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள் பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.
நான் இதை இத்தனை அக்கறையோடு சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின், பத்து மி.கி.,க்கும் குறைவு. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில், 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக நான் கண்ட உண்மை.
வேலூர் மருத்துவமனையில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் உயிருக்குப் போராடி, எமனை பார்த்து விட்டுத் திரும்பி வந்தான் என்றே கூறலாம். வரும்போது ஹீமோகுளோபின், 6 மி.கி., தான். வழக்கம் போல் மருந்து, மாத்திரைகள் மூலம் ஹீமோகுளோபினைக் கூட்ட மிகவும் முயற்சி செய்தனர். பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஆர்லிக்ஸ், பழங்கள் கொண்டு வர, நான் மட்டும் நெல்லிக்காய் ஜாம் கொண்டு சென்றேன்; மகிமையையும் கூறினேன்.
பதினைந்து நாட்கள் கழித்து தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி கூறி, "இன்னும் நெல்லிக்காய் ஜாம் செய்து தர முடியுமா? கணிசமான முன்னேற்றம் என் மகனின் உடல்நிலையில்...' என்று கூறினார் நண்பர். ஒரு மாதத்தில் ஹீமோகுளோபின், 11 மி.கி., ஆக கூடி விட்டது. குடும்பமே எனக்கு நன்றி தெரிவித்தது. இப்போது கல்லூரிக்குச் செல்கிறான்.
அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.
சர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது தான் இக்கடிதத்தின் மிகவும் முக்கியக் குறிப்பு!
சர்க்கரை நோயுள்ள ஆண்களின் தாம்பத்ய வாழ்வில் மீண்டும் உற்சாகத்தை அளிக்கவல்லது நெல்லிக்காய் என்பதை, குறிப்பால் உணர்த்தி விட்டார் அந்த வாசகி.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narmatha Selvi - Calgary,கனடா
06-ஆக-201102:14:54 IST Report Abuse
Narmatha Selvi சபாஷ் Ravi. You are absolutely correct.
Rate this:
Share this comment
Cancel
தி.சி.SARAVANAN - TIRUPUR,இந்தியா
05-ஆக-201118:47:05 IST Report Abuse
தி.சி.SARAVANAN நன்றி அந்துமணி சார். மேலும் சித்த மருத்துவ குறிப்புகளை வாரம் தவறாமல் அனுப்பவும்
Rate this:
Share this comment
Cancel
த.ச.SARAVANAN - tirupur,இந்தியா
05-ஆக-201118:43:36 IST Report Abuse
த.ச.SARAVANAN நன்றி 2 வாரங்களாக வரும் அந்துமணியின் பாகேப பயனுல்லதகவலாக உள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X