மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், 1027.17 அடி உயரமுள்ள துாண் ஒன்று, கம்பீரமாக காட்சியளிக்கிறது. 1871ல் கட்டப்பட்ட இது, நினைவு துாண் இல்லை.
பிரிட்டிஷார் நம்மை ஆண்ட போது, நாட்டின் மையப்பகுதி எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க ஆய்வு நடத்தி, நாக்பூரில் இருப்பதை கண்டுபிடித்து, பதிவு செய்யப்பட்டது.
'ஜீரோ மைல் ஸ்டோன்' என்ற இந்த துாணிலிருந்து சென்னை, மும்பை, கோல்கட்டா மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்கள் இருப்பதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.