பல ஆண்டுகளாக, ஒரே வடிவில் இட்லி சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு, வித விதமான இட்லிகள் சாப்பிட, சில ஹோட்டல்களில் ஏற்பாடு செய்துள்ளனர். 21 விதமான இட்லிகள், 21 வித சட்னிகளுடன் வழங்கி வருகிறது, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள, 'மாமிஸ் கிச்சன்' என்ற சிறிய ஹோட்டல்.
பல்வேறு தானியங்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசமான இட்லி, சட்னிகளை சாப்பிட, அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து கூட, உணவு பிரியர்கள் இங்கு வருகின்றனர். இது மட்டுமின்றி, தேனீர் பிரியர்களுக்காக, 51 வித ருசிகளை கொண்ட தேனீர் வகைகளை இங்கு வழங்கி வருகின்றனர்.
'காலங்காலமாக ஒரே மாதிரியான இட்லிகளை தான் சாப்பிடணுமா... எல்லாவற்றிலும் மாறுதல் வேண்டாமா என்பவர்களுக்காக, அறிமுகப்படுத்தினது தான் இது...' என்கிறார், ஹோட்டல் உரிமையாளர்.
— ஜோல்னாபையன்