'பெயர் பலகை, நம்பிக்கை வாச கம் தாங்கிய கவின்மிகு மரப் பலகைகள், காய் கறி நறுக்க தேக்கு பலகை, மர பொம்மைகள்னு நாலைந்து பொருட் களோட நிறைய நம்பிக்கை வைச்சு, 2020ம் ஆண்டு துவக்கின தொழில் இது!' - சமூக வலைதளங்களில், 'லைவ்லிவுட்ஸ் ஆர்ட்டிஸ்ட்ரி' பெய ரில் மரக்கலை பொருட்கள் விற்கும் கோவை கோகிலாக் ஷினி.
என்னென்ன...
மினியேச்சர் கேமரா/வீடு, பூந்தொட்டி தாங்கும் மர அலமாரி, ஓவிய மரப்பலகைன்னு, ரூ.500 மதிப்பிலான கீ செயினில் துவங்கி, ரூ.12 ஆயிரம் வரையிலான மரத்தினால் ஆன கலைப்பொருட்கள் என் வசம் நிறைய இருக்கு!
வீட்டின் முகப்பு, சுவரின் வண்ணம், இடவசதிக்கேற்ப தேக்கு, வாகை, பைன், பலா மரத்துண்டுகள்ல கலைப்பொருட்கள் வடிவமைச்சு தர்றது என் சிறப்பு! 'சீசனிங், கிரிப்பிங், வாட்டர் ட்ரீட்மென்ட்'னு மரத்தை பக்குவப்படுத்தி பொருட்களை வடிவமைக்கிறதால என் தயாரிப்புகளுக்கு ஆயுள் அதிகம்!
இப்போதைக்கு சமூக வலைதளங்கள் தவிர்த்து, கண்காட்சிகள், சுற்றுலா தலங்கள்ல என் தயாரிப்புகளை சந்தைப்படுத்துறேன். குழந்தைகளுக்கான அறைகளை என் படைப்புகளால நிறைக்கணும்ங்கிறது ஆசை. 'வாழும் சூழலை நாம மரப்பொருட்களால நிரப்பினா அதோட நேர்மறை ஆற்றலால மனசு நிறையும்'ங்கிறது என் நம்பிக்கை.
சிறப்பு பொருள்: மனம் ஈர்க்கும் மரத்துண்டு கடிகாரம் - ரூ.1,000 முதல்
80563 26511