'பகுதி பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து, துணைப் பொதுச் செயலர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, 'தலைவர்' பொறுப்பை சுமக்கிறேன்!' - தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின். உறுதியா சொல்றேன், 'இதுதான்டா வளர்ச்சி'ன்னு உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் சிலிர்த்திருப்பார்!
அது எப்படிங்க அது, 'ஆன்லைன்' சூதாட்டத்தால பணத்தை இழந்தா மட்டும், 'ஆன்லைன் ரம்மியை தடை பண்ணுங்க'ன்னு கடிதம் எழுதி வைச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க; இல்ல... மதுவுக்கு அடிமையாகி சாகுறவன் எவனும், 'என் சாவுக்கு 'டாஸ்மாக்'தான் காரணம்'னு சொல்லாம சாகுறானுங்களே... அதான் கேட்டேன்!
'இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில பண்ணியிருந்தா இத்தனை லட்சம் செலவாகி இருக்கும்; அரசு மருத்துவமனையில பண்ணினதால இது இலவசம்!' - இப்படி அறிவிப்பு தர்ற அரசுகிட்டே ஒரு கேள்வி; இதுமூலமா, மருத்துவர்களோட சாதனையை சொல்றீங்களா... செஞ்ச கடமையை விளம்பரம் பண்றீங்களா?
'இந்தியாவிற்கு தி.மு.க., தலைவர் வழிகாட்ட வேண்டும் என இந்திய அரசியல் தலைவர்கள் கேட்கின்றனர்!' - தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி. ஏனுங்க பாரதி... 'சி.பி.ஐ., தவறாக பயன்படுத்தப்படுகிறது'ன்னு பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அனுப்பின கடிதத்துல, தி.மு.க., தலைவர் கையெழுத்து இல்லையே... ஏன்?
ம்ம்ம்... அழைப்பு வந்திருக்காதோ!