உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இந்திய விமானப்படை வரலாற்றிலேயே முதன்முறையாக, பெண் அதிகாரி ஒருவர், விமானப்படையின் முன்கள போர்ப்படை அணியின் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார்?
அ. ஷிவானி சிங்
ஆ. ஷாலிஸா தாமி
இ. பாவனா காந்த்
ஈ.ஆவனி சதுர்வேதி
2. இந்தியாவில் செயற்படும் ரியல் எஸ்டேட் சொத்து ஆலோசனை நிறுவனமான, 'அனர்கா' மேற்கொண்ட ஆய்வில், பெண்கள் தங்கத்தைவிட, எதில் முதலீடு செய்ய அதிக முன்னுரிமை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது?
அ. பங்குச் சந்தை
ஆ. நிதி நிறுவனம்
இ. சொந்தத் தொழில்
ஈ. ரியல் எஸ்டேட்
3. தமிழக அரசால், ரூ.18.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகம், எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
அ. சிவகங்கை
ஆ. திருச்சி
இ. சேலம்
ஈ. ஈரோடு
4. இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில், நீர்வளப் பாதுகாப்பில் சிறப்பாகச் செயற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட எத்தனை பெண்களுக்கு, சிறப்பு விருதுகளை வழங்கி, ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார்?
அ. 40
ஆ. 12
இ. 32
ஈ. 36
5. தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த, மத்திய அரசுக்கு எவ்வளவு கோடி ரூபாய் கடன் தொகையை உலக வங்கி அளிப்பதாக, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?
அ. ரூ. 10,000 கோடி
ஆ. ரூ. 6,500 கோடி
இ. ரூ. 8,200 கோடி
ஈ. ரூ. 8,500 கோடி
6. உலகிலேயே முதன்முறையாக, 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு, வின்சந்திராபூர் - யவத்மால் மாவட்டங்களுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது. இது, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அ. மஹாராஷ்டிரம்
ஆ. பீஹார்
இ. அசாம்
ஈ. உத்தரப் பிரதேசம்
7. இருபது லட்சம் வீரர்கள் கொண்ட, உலகின் மிகப்பெரும் சீன இராணுவத்திற்கு, அந்நாட்டின் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?
அ. ரூ.20 லட்சம் கோடி
ஆ. ரூ.18 லட்சம் கோடி
இ. ரூ.25 லட்சம் கோடி
ஈ. ரூ.33 லட்சம் கோடி
8. இந்திய கிரிக்கெட் கெளன்சில் வெளியிட்டுள்ள, டெஸ்ட் பெளலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், 'நம்பர் 1' இடத்தை, சமீபத்தில் எந்த நாட்டு வீரரான ஆன்டர்சனுடன், இந்தியாவின் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்?
அ. ஆஸ்திரேலியா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. இங்கிலாந்து
ஈ. நியூசிலாந்து
விடை: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. அ, 7. ஆ, 8. இ.