* ஆப்பிரிக்காவில் கொம்புள்ள பச்சோந்திகள் வாழ்கின்றன.
உண்மை.
ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்காவிலும் 'ஜாக்சன் பச்சோந்தி' என்று அழைக்கப்படும் மூன்று கொம்புகள் உடைய பச்சோந்திகள் வாழ்கின்றன. கொம்புகளைக் கொண்டு, இவை ஆக்ரோஷமாகச் சண்டையிடுகின்றன. 5 - 10 ஆண்டுகள் வரை வாழும். 9 - 13 அங்குல நீளமும், 90 - 150 கிராம் எடையும் கொண்டிருக்கும். இவை, பூச்சிகள், சிறு பறவைகள், பல்லிகள், நத்தைகள், சிலந்திகளை உணவாகக் கொள்ளும். பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். 8 - 30 முட்டைகள் இடும்.
* பிரம்மபுத்ரா ஆற்றின் நீளம் 1500 கி.மீ.
தவறு.
இமயமலையில் தோன்றி, திபெத், அருணாசலப் பிரதேசம், அசாம், வங்கதேசம் வழியாகப் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கும் பிரம்மபுத்ரா ஆற்றின் மொத்த நீளம் 2900 கி.மீ. ஆகும். இது மத்திய, தெற்கு ஆசியாவின் மிக முக்கியமான ஆறாகும். இதன் மொத்த நீளத்தில், 1,100 கி.மீ. மட்டுமே நீர்வழிப் போக்குவரத்துக்கு உகந்ததாக உள்ளது.