மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ரிசர்ச்' நிறுவனம் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : 'சயின்டிஸ்ட் - பி' 18, 'சயின்டிஸ்ட் - சி'3 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 8.4.2023 அடிப்படையில் 'சயின்டிஸ்ட் - பி' 30, 'சி' 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400.
கடைசிநாள் : 8.4.2023 மாலை 5:30 மணி
விபரங்களுக்கு : calicut.nielit.in/sameer