பொதுத்துறையை சேர்ந்த 'கெயில்' காஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : சீனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல் 72, தீயணைப்பு பாதுகாப்பு 12, மார்க்கெட்டிங் 6, நிதி, அக்கவுன்ட்ஸ் 6, கம்பெனி செகரட்ரி 2, எச்.ஆர்., 6, ஜூனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல் 16 என மொத்தம் என மொத்தம் 120 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : மார்க்கெட்டிங், நிதி, அக்கவுன்ட்ஸ், எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.ஏ., கம்பெனி செகரட்ரி பிரிவுக்கு சி.ஏ., மற்ற பிரிவுக்கு பி.இ.,, ஜூனியர் டெக்னிக்கல் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் : தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 10.4.2023 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
ஒப்பந்தகாலம் : மூன்றாண்டு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 10.4.2023
விபரங்களுக்கு : gailgas.com