'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம், வரும் 21ம் தேதி அறிமுகப்படுத்த உள்ள அதன் 'வெர்னா' காருக்கான தொழில்நுட்ப அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார், 'இ.எக்ஸ்., எஸ்., எஸ்.எக்ஸ்., மற்றும் எஸ்.எக்ஸ் - ஒ' ஆகிய நான்கு வகையில் வருவதோடு, மேனுவல் மற்றும் ஆட்டோ டிரான்ஸ்மிஷன்களிலும் வெளிவர உள்ளது.
டீசல் அல்லாது, பெட்ரோல் இன்ஜின் காராக மட்டுமே களமிறங்கும் இந்த வெர்னா கார், 1.5 லிட்டர் சாதாரண மற்றும் டர்போ பெட்ரோல் ஆகிய இரண்டு ரகங்களில் வளம் வருகிறது. இன்போடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய இரண்டும் இருக்கும் படியான, 10.25 அங்குல டூயல் டிஸ்ப்ளே அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 8 ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் சவுண்டு சிஸ்டம், 'ஏ.சி' சீட்டுகள், ஸ்விட்ச் மூலம் இன்போடெயின்மென்ட் அமைப்பு மற்றும் 'ஏ.சி' ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் படியான புதிய வசதி உட்பட பல அம்சங்களை கொண்டுள்ளது, இந்த கார்.
கூடுதலாக, காரின் நீலம் மற்றும் அகலம் உயர்த்தப்பட்டுள்ளதால், இதன் பூட் ஸ்பேஸ் 50 லிட்டர் அதிகரித்துள்ளது. இந்த காரின் விலை, தற்போது சந்தையில் இயங்கி வரும் வெர்னா காரின் விலையை விட 60,000 முதல் 1 லட்சம் வரை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபரக் குறிப்பு
இன்ஜின் - 1.5 லிட்டர் பெட்ரோல் - 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்
ஹார்ஸ் பவர் - 115 பி.எஸ்., - 160 பி.எஸ்.,
டார்க் - 144 என்.எம்., - 253 என்.எம்.,
மைலேஜ் - 18 கி.மீ., - 17.4 கி.மீ.,
பூட் ஸ்பேஸ் - 528 லிட்டர் - 528 லிட்டர்