தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 கப்
அவல் - 1 கப்
புளித்த மோர் - 0.5 கப்
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
அவல் மற்றும் புழுங்கல் அரிசியை தனித்தனியே நீரில் ஊற வைக்கவும். இரண்டையும் நைசாக அரைக்கவும். அதில், உப்பு, புளித்த மோர் சேர்த்து கலக்கவும்.
இந்த மாவை, இரண்டு மணி நேரத்திற்குப் பின், தோசைக்கல்லில் ஊற்றி வேகவைக்கவும். சுவைமிக்க, 'அவல் ஊத்தப்பம்!' தயார். சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிடலாம்.
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.