உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டால், கவலைப்படாதீர்கள். தினமும், உணவுக்கு முன், கொஞ்சம் மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சரியாகும்.
அமெரிக்காவில், பாஸ்டன் நகரில் உள்ள, 'இஸ்ரேல் டியோகோன்ஸ்' மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில், இதை கண்டுபிடித்துள்ளனர். தினமும், முருங்கைக் கீரையை சிறிது மென்று தின்பவர்களுக்கு, ரத்த அழுத்தம் வராதாம்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாத விலக்கு நின்ற பெண்களுக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, 'ஹைப்பர் டென்ஷன்' எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இப்படிப்பட்டவர்களில், 48 பேரை தேர்வு செய்து, அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டன.
தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப்பட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர்களுக்கு ரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தது. தினமும், 50 கிராம் மொச்சைக் கொட்டையை உணவுக்கு முன் சாப்பிட்டால் போதும், உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
மேலும், மொச்சை இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்து, தினமும் உணவுக்கு முன் சிறிது உண்டு வந்தால், நீரிழிவு நோயும் கட்டுப்படும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.
தொகுப்பு: பி.சி.ரகு