புரிந்துகொள்ள முடியவில்லை
இந்தப் பூமிப் பந்தில்
உள்ள நாடுகளையும்
வாழும் மனிதர்களையும்!
முதலாளித்துவமும்கம்யூனிசமும்
ஜனநாயக சோசலிசமும்
இங்கு தான்!
எதிர் எதிர் சித்தாந்தங்கள்
கொள்கைகள், கருத்துகள்
பழக்க வழக்கங்கள்
கொண்ட மதங்கள் இங்கு தான்!
சகாரா பாலைவனமும்
காஷ்மீர சோலைவனமும்
பசியறியா மேலை நாடுகளும்
பசி மட்டுமறிந்த சோமாலியா நாடும்
இப்பூமியில் தான்!
விண்ணில் வீட்டை கட்டினாலும்கடலில் கோடு போட்டு
எல்லைகளைப் பிரித்தாலும்
சுரங்கம் தோண்டி
தங்கம் எடுத்தாலும்மனிதன் பேராசை பிடித்தவனாக
மண்ணாசை கொண்டவனாகவே
இருக்கிறான்!
வளரும் விஞ்ஞானம் கொண்டு
ஆயுதங்கள், அணுகுண்டுகள்
போர்க் கருவிகள், நுண்கிருமிகள்
தயாரிக்கிறான்!
அண்டை நாடுகளை
கைப்பற்ற நினைக்கிறான்
அடக்கியாள, அடிமைப்படுத்த
நினைக்கிறான்!
மனிதன் எத்தனை எத்தனை
கண்டுபிடித்தாலும்
அறிவியலில் வளர்ந்தாலும்
கற்கால மனிதன் தானே?
சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.