காய்கறிகளின் தோலில் தான் அதிகமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. அவற்றை சீவி வீணாக்காமல், துவையல் செய்து சாப்பிடுவதால், சத்துக்கள் கிடைக்கும்.
பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது, எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால், சீக்கிரம் வெந்து விடும்.
பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்குவதால், கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, உப்பை சிறிதளவு கத்தியில் தடவி, நீரில் கழுவலாம்.